ராஜவித்யாராஜகுஹ்ய யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 56.
ஒன்பதாவது அத்தியாயம் (ராஜவித்யாராஜகுஹ்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத நவமோ அத்யாய:।
ராஜவித்யாராஜகுஹ்ய யோகம்
(பக்தியே ரகசியம்)
ஸ்ரீபகவாநுவாச।
இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே।
ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே அஷுபாத்॥ 9.1 ॥
ஸ்ரீ பகவான் கூறினார்: எதை அறிந்தால் தடைகளிலிருந்து விடுபடுவாயோ, விஞ்ஜானத்துடன் கூடியதும் அதிரகசியமானதுமான அந்த பாதையை தவறான பார்வையில்லாதவனான உனக்கு சொல்கிறேன்.
ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரமிதமுத்தமம்।
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸுஸுகம் கர்துமவ்யயம்॥ 9.2 ॥
இந்த பாதை வித்தைகளுள் தலை சிறந்தது, அதிரகசியமானது, புனிதபடுத்துவதில் தலை சிறந்தது, கண்கூடாக உணரத்தக்கது, தர்மத்துடன் கூடியது, செய்வதற்கு இன்பமானது, அழிவற்றது.
அஷ்ரத்ததாநா: புருஷா தர்மஸ்யாஸ்ய பரம்தப।
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மநி॥ 9.3 ॥
எதிரிகளை வாட்டுபவனே ! இந்த தர்மத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் என்னை அடையாமல் மரணத்துடன் கூடிய உலக வாழ்க்கையில் உழல்கிறான்.
மயா ததமிதம் ஸர்வம் ஜகதவ்யக்தமூர்திநா।
மத்ஸ்தாநி ஸர்வபூதாநி ந சாஹம் தேஷ்வவஸ்தித:॥ 9.4 ॥
புலன்களுக்கு தென்படாத என்னால் இந்த உலகம் அனைத்தும் வியப்பிக்கபட்டுள்ளது. எல்லா உயிர்களும் என்னிடம் இருக்கின்றன, நானோ அவற்றில் இல்லை.
ந ச மத்ஸ்தாநி பூதாநி பஷ்ய மே யோகமைஷ்வரம்।
பூதப்ருந்ந ச பூதஸ்தோ மமாத்மா பூதபாவந:॥ 9.5 ॥
உயிரினங்கள் என்னில் இல்லை, என் தெய்வீக ஆற்றலை பார்—உயிரினங்களை நானே படைக்கிறேன், தாங்குகிறேன், ஆனால் நான் அவற்றில் இல்லை.
யதாகாஷஸ்திதோ நித்யம் வாயு: ஸர்வத்ரகோ மஹாந்।
ததா ஸர்வாணி பூதாநி மத்ஸ்தாநீத்யுபதாரய॥ 9.6 ॥
எங்கும் நிறைந்ததும் ஆற்றல் வாய்ந்ததுமான காற்று எப்படி எப்போதும் ஆகாசத்தில் இருக்கிறதோ, அப்படியே எல்லா உயிர்களும் என்னிடம் உள்ளன என்பதை தெரிந்துகொள்.
ஸர்வபூதாநி கௌந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம்।
கல்பக்ஷயே புநஸ்தாநி கல்பாதௌ விஸ்ருஜாம்யஹம்॥ 9.7 ॥
அர்ஜுனா ! கல்ப முடிவில் எல்லா உயிர்களும் என் சக்தியில் ஒடுங்குகின்றன. கல்ப ஆரம்பத்தில் மீண்டும் அவற்றை நான் தோற்றுவிக்கிறேன்.
ப்ரக்ருதிம் ஸ்வாமவஷ்டப்ய விஸ்ருஜாமி புந: புந:।
பூதக்ராமமிமம் க்ருத்ஸ்நமவஷம் ப்ரக்ருதேர்வஷாத்॥ 9.8 ॥
என் சக்தியை பரிணமிக்க செய்து, தன் வசமில்லாமல் எனது சக்தியின் வசத்தில் இருக்கின்ற எல்லா உயிரினங்களையும் மீண்டும் மீண்டும் தோற்றுவிக்கிறேன்.
ந ச மாம் தாநி கர்மாணி நிபத்நந்தி தநம்ஜய।
உதாஸீநவதாஸீநமஸக்தம் தேஷு கர்மஸு॥ 9.9 ॥
அர்ஜுனா ! கர்மங்களில் பற்றற்றவனாகவும், பொருட்படுத்தாதவனை போலவும் இருக்கின்ற என்னை அந்த கர்மங்கள் கட்டுபடுத்துவது இல்லை.
மயாத்யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸசராசரம்।
ஹேதுநாநேந கௌந்தேய ஜகத்விபரிவர்ததே॥ 9.10 ॥
அர்ஜுனா ! என்னால் வழிநடத்தபெற்று, எனது அந்த சக்தி, அசைவதும், அசையாததும் நிறைந்த உலகை படைக்கிறது, இவ்வாறு உலகம் செயல்படுகிறது .
அவஜாநந்தி மாம் மூடா மாநுஷீம் தநுமாஷ்ரிதம்।
பரம் பாவமஜாநந்தோ மம பூதமஹேஷ்வரம்॥ 9.11 ॥
உயிர்களின் தலைவனான எனது மேலான இயல்பை அறியாத மூடர்கள் மனித உடலை எடுத்துள்ளவன் என்று என்னை அவமதிக்கிறார்கள்.
மோகாஷா மோககர்மாணோ மோகஜ்ஞாநா விசேதஸ:।
ராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹிநீம் ஷ்ரிதா:॥ 9.12 ॥
அசுரர் மற்றும் அரக்கர்களின் இயல்புகளான மனமயக்கமும் விவேகமின்மையும் நிறைந்த இந்த கோணல் அறிவினர் நம்பிக்கைகள் வீண், செயல்களும் வீணே.
மஹாத்மாநஸ்து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிமாஷ்ரிதா:।
பஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூதாதிமவ்யயம்॥ 9.13 ॥
அர்ஜுனா ! தெய்வீக இயல்பினரான மகான்கள், உயிர்களின் பிறப்பிடமும் , அழிவற்றவனும் ஆகிய என்னை அறிந்து வேறு எதிலும் மனத்தை செலுத்தாமல் என்னை வழிபடுகிறார்கள்.
ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஷ்ச த்ருடவ்ரதா:।
நமஸ்யந்தஷ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே॥ 9.14 ॥
என்னை எப்போதும் போற்றியும், உறுதியான ஈடுபாட்டுடன் முயற்சி செய்தும், பக்தியுடன் வணங்கியும், எப்போதும் ஒருமுகப்பட்ட மனத்தினராக இருந்தும் அவர்கள் வழிபடுகிறார்கள்.
ஜ்ஞாநயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே।
ஏகத்வேந ப்ருதக்த்வேந பஹுதா விஷ்வதோமுகம்॥ 9.15 ॥
ஞான வேள்வியில் வழிபடுகின்ற மற்றவர்களும் ஒன்றாக, பலவாக, எங்கும் நிறைந்தவனாக பல விதங்களில் என்னையே வழிபடுகிறார்கள்.
அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதாஹமஹமௌஷதம்।
மந்த்ரோ அஹமஹமேவாஜ்யமஹமக்நிரஹம் ஹுதம்॥ 9.16 ॥
நானே கிரது, நானே வேள்வி, நானே ஷ்வதா, நானே ஔஷதம், நானே மந்திரம், நானே நெய், நானே அக்னி, வேள்வி செய்தலாகிய கர்மமும் நானே.
பிதாஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ:।
வேத்யம் பவித்ரமோம்கார க்ருக்ஸாம யஜுரேவ ச॥ 9.17 ॥
இந்த உலகின் தந்தையாக, தாயாக, பாட்டனாக, வினைபயனை அளிப்பவனாக, அறியத்தக்கவனாக, புனிதபடுத்துபவனாக, பிரணவ வடிவினனாக, ரிக், சாம, யஜுர், வேதங்களாக நானே இருக்கிறேன்.
கதிர்பர்தா ப்ரபு: ஸாக்ஷீ நிவாஸ: ஷரணம் ஸுஹ்ருத்।
ப்ரபவ: ப்ரலய: ஸ்தாநம் நிதாநம் பீஜமவ்யயம்॥ 9.18 ॥
புகலிடம், வளர்ப்பவன், தலைவன், சாட்சி, இருப்பிடம், தஞ்சம், நண்பன், பிறப்பிடம், ஒதுங்குமிடம், தங்குமிடம், செல்வம், அழிவற்ற விதை, அனைத்தும் நானே.
தபாம்யஹமஹம் வர்ஷம் நிக்ருண்ஹாம்யுத்ஸ்ருஜாமி ச।
அம்ருதம் சைவ ம்ருத்யுஷ்ச ஸதஸச்சாஹமர்ஜுந॥ 9.19 ॥
அர்ஜுனா ! நான் வெப்பம் தருகிறேன், நானே மழை பெய்ய செய்கிறேன், தடுக்கவும் செய்கிறேன், மரணமின்மையும், மரணமும், இருப்பதும், இல்லாததும் நானே.
த்ரைவித்யா மாம் ஸோமபா: பூதபாபா யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்கதிம் ப்ரார்தயந்தே।
தே புண்யமாஸாத்ய ஸுரேந்த்ரலோகம் அஷ்நந்தி திவ்யாந்திவி தேவபோகாந்॥ 9.20 ॥
வேதங்களை அறிந்தவர்களும், சோமபானம் அறிந்தியவர்களும், பாவம் நீங்க பெற்றவர்களும், யாகங்களால் என்னை வழிபாட்டு சொர்கத்தை பிராத்திக்கிறார்கள். அவர்கள் நற்செயல்களின் விளைவாக இந்திர லோகத்தை அடைந்து சொர்கத்தில் மேலான தேவ போகங்களை அனுபவிக்கிறார்கள்.
தே தம் புக்த்வா ஸ்வர்கலோகம் விஷாலம் க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஷந்தி।
ஏவம் த்ரயீதர்மமநுப்ரபந்நா கதாகதம் காமகாமா லபந்தே॥ 9.21 ॥
அவர்கள் பரந்த அந்த சொர்க்கத்தை அனுபவித்து, புண்ணிய பலன் தீர்ந்ததும் பூமியை அடைகிறார்கள். வேதங்கள் கூறுகின்ற கர்மங்களை பின்பற்றுபவர்கள் உலகியல் நாட்டம் உடையவர்களாக இவ்வாறு வரவும் போகவும் செய்கிறார்கள் .
அநந்யாஷ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே।
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்॥ 9.22 ॥
வேறு எதையும் நினைக்காமல் என்னையே நினைத்து யார் எங்கும் என்னையே வழிபடுகிறார்களோ, மாறாத உறுதிகொண்ட அந்த பக்தர்களின் யோக க்ஷேமத்தை நான் தாங்குகின்றேன்.
யே அப்யந்யதேவதாபக்தா யஜந்தே ஷ்ரத்தயாந்விதா:।
தே அபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம்॥ 9.23 ॥
குந்தியின் மகனே ! எந்த பக்தர்கள் மற்ற தெய்வங்களையும் நம்பிக்கையுடன் வழிபடுகிறார்களோ, அவர்களும் உண்மையை சரியாக அறியாமல் என்னையே வழிபடுகிறார்கள் .
அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச।
ந து மாமபிஜாநந்தி தத்த்வேநாதஷ்ச்யவந்தி தே॥ 9.24 ॥
எல்லா யாகங்களுக்கும் நானே தலைவன். யாகங்களை அனுபவிப்பவனும் நானே. ஆனால் அவர்கள் என்னை உள்ளபடி அறிவதில்லை. அதனால் மேலான பலனை இழக்கிறார்கள்.
யாந்தி தேவவ்ரதா தேவாந்பித்றுந்யாந்தி பித்ருவ்ரதா:।
பூதாநி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜிநோ அபி மாம்॥ 9.25 ॥
தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களை அடைகிறார்கள். இறந்த முன்னோரை வழிபடுபவர்கள் முன்னோரை அடைகிறார்கள். பூதங்களை வழிபடுபவர்கள் பூதங்களை அடைகிறார்கள். என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள்.
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி।
ததஹம் பக்த்யுபஹ்ருதமஷ்நாமி ப்ரயதாத்மந:॥ 9.26 ॥
இலை, பூ, பழம், நீர், போன்றவற்றை யார் எனக்கு பக்தியுடன் அளிக்கிறானோ, தூய மனத்தை உடைய அவன் பக்தியுடன் அளிப்பதை நான் ஏற்று கொள்கிறேன்.
யத்கரோஷி யதஷ்நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத்।
யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மதர்பணம்॥ 9.27 ॥
குந்தியின் மகனே ! எதை செய்கிறாயோ, எதை உண்கிறாயோ, எதை ஹோமம் செய்கிறாயோ, எதை தானம் செய்கிறாயோ, எந்த தவம் செய்கிறாயோ, அதை எனக்கு அர்பனமாக செய்.
ஷுபாஷுபபலைரேவம் மோக்ஷ்யஸே கர்மபந்தநை:।
ஸம்ந்யாஸயோகயுக்தாத்மா விமுக்தோ மாமுபைஷ்யஸி॥ 9.28 ॥
இவ்வாறு, நல்ல மற்றும் தீய பலன்களை தருகின்ற கர்மபந்தங்களிலிருந்து விடுபடுவாய். சந்நியாச யோகத்தில் மனத்தை நிலைபெற செய்து , வினைகளிலிருந்து விடுபட்டு என்னை அடைவாய்.
ஸமோ அஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோ அஸ்தி ந ப்ரிய:।
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம்॥ 9.29 ॥
நான் எல்லா உயிர்களிடமும் சமமாக இருக்கிறேன். எனக்கு பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை, யார் என்னை பக்தியுடன் போற்றுகிரார்களோ, அவர்கள் என்னிடம் உள்ளார்கள் , நானும் அவர்களிடம் உள்ளேன்.
அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநந்யபாக்।
ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்வ்யவஸிதோ ஹி ஸ:॥ 9.30 ॥
மிக கொடியவனும் கூட வேறு எதையும் நினைக்காமல் என்னையே வழிபடுவானானால் அவன் நல்லவன் என்றே கருதப்பட வேண்டும். ஏனெனில் அவன் சரியான நோக்கத்தை உடையவன்.
க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஷஷ்வச்சாந்திம் நிகச்சதி।
கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்த: ப்ரணஷ்யதி॥ 9.31 ॥
அவன் விரைவில் தர்மத்தில் நிலை பெற்றவன் ஆகிறான். நிலைத்த அமைதியை பெறுகிறான். குந்தியின் மகனே ! எனது பக்தன் அழிவதில்லை என்பது உறுதி.
மாம் ஹி பார்த வ்யபாஷ்ரித்ய யே அபி ஸ்யு: பாபயோநய:।
ஸ்த்ரியோ வைஷ்யாஸ்ததா ஷூத்ராஸ்தே அபி யாந்தி பராம் கதிம்॥ 9.32 ॥
அர்ஜுனா ! யார் இழிந்த பிறவிகளோ அவர்களும், பெண்கள், வைசியர் மற்றும் சூத்திரர்கள் என்னை சார்ந்து இருந்து நிச்சயமாக மேலான கதியை அடைகிறார்கள்.
கிம் புநர்ப்ராஹ்மணா: புண்யா பக்தா ராஜர்ஷயஸ்ததா।
அநித்யமஸுகம் லோகமிமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்॥ 9.33 ॥
புண்ணியசாலிகளும், பக்தர்களுமாகிய பிராமணர்களும், ராஜரிஷிகளும் அடைய மாட்டார்களா என்ன ! நிலையற்றதும் இன்பமற்றதுமாகிய இந்த உலகை அடைந்த நீ என்னை வழிபடு.
மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு।
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண:॥ 9.34 ॥
மனத்தை என்னிடம் வைத்தவனாக, எனது பக்தனாக, என்னை வழிபடுபவனாக ஆவாய். என்னை வணங்கு, இவ்வாறு என்னை மேலான கதியாக கொண்டு, மன உறுதியுடன் வழிபட்டால் என்னையே அடைவாய்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
ராஜவித்யாராஜகுஹ்யயோகோ நாம நவமோ அத்யாய:॥ 9 ॥
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'ராஜவித்யாராஜகுஹ்ய யோகம்' எனப் பெயர் படைத்த ஒன்பதாவது அத்தியாயம் நிறைவுற்றது.
விளக்கம்:
காற்று எவ்வாறு இந்த உலகம் முழுவதும் பரவியிருக்கிறதோ அவ்வாறே பகவான் எங்கும் நிறைந்து இருக்கிறார். இது புலன்களுக்கு ( கண்களுக்கு ) தென்படாது. அனைத்து உயிர்களும் இறைவனிடத்திலேயே இருக்கின்றன. அசையும் பொருள் அசையா பொருள் அனைத்தும் இறைவனாலேயே தொற்றுவிக்கபடுகிறது.
அனைத்து செயல்களும் இயற்க்கை செய்கிறது. சொர்க்க வாழ்க்கை வாழ வேண்டும் என்று வேதங்களில் கூறப்பட்ட செயல்களை செய்தும் வழிபாடு செய்தும் கொண்டு இருப்பவர்களை இறைவனே சொர்க்கத்திற்கு எடுத்து செல்கிறார். அவர்களுடைய புண்ணியங்கள் தீர்ந்த பிறகு மீண்டும் அவர்கள் இந்த பூமியில் உயிரினமாக பிறப்பார்கள். இறைவனை அடைந்தால் மட்டுமே பிறவியில் இருந்து விடுபட முடியும்.
பக்தியுடனும் தூய மனத்துடனும் பக்தன் அளிக்கும் எந்த சிறிய பொருளையும் இறைவன் அன்பாக ஏற்றுகொள்வார். இப்படிபட்ட இறைவன் அனைத்து உயிரையும் சமமாக காண்கிறார். அதேபோல் எந்த மனிதன் அனைத்து உயிரினங்களையும் சமமாக காண்கின்றானோ அவன் இறைவனுக்கு மிகவும் பிரியமானவன். எல்லா வேலைகளையும் செய்யலாம் ஆனால் அதனால் விளையும் பலனில் விருப்பு வெறுப்பு கொள்ளாமல் இறைவனுக்கு அர்பணித்து விட்டு இருந்தால் எந்த பாவத்திற்கும் ஆளாகாமல் இந்த பிறவியிலேயே முக்தி அடையலாம். அதாவது மீண்டும் பிறவா நிலையை அடையலாம்.
தொடரும்...