விபூதி யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 57.

#history #Article #Tamil People
விபூதி யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் -  57.

பத்தாவது அத்தியாயம் (விபூதி யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத தஷமோ அத்யாய:।

விபூதி யோகம்

(திருப்புகழ்)

ஸ்ரீபகவாநுவாச।
பூய ஏவ மஹாபாஹோ ஷ்ருணு மே பரமம் வச:।
யத்தே அஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா॥ 10.1 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: பெருந்தோள் உடையவனே ! எனது மேலான வார்த்தைகளை கேள். கேட்பதில் மகிழ்ச்சி அடைகின்ற உனது நன்மைக்காக நான் மீண்டும் சொல்கிறேன்.

ந மே விது: ஸுரகணா: ப்ரபவம் ந மஹர்ஷய:।
அஹமாதிர்ஹி தேவாநாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஷ:॥ 10.2 ॥

எனது ஆரம்பத்தை தேவர்களும் மகரிஷிகளும் அறியவில்லை. ஏனெனில் நான் தேவர்களுக்கும் மகரிஷிகளுக்கும் எல்லாவகையிலும் முற்பட்டவன்.

யோ மாமஜமநாதிம் ச வேத்தி லோகமஹேஷ்வரம்।
அஸம்மூட: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே॥ 10.3 ॥

நான் பிறப்பற்றவன், ஆரம்பமற்றவன், உலகின் தலைவன் என்று யார் அறிகிறானோ அவன் மனமயக்கம் இல்லாதவன் . அவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான்.

புத்திர்ஜ்ஞாநமஸம்மோஹ: க்ஷமா ஸத்யம் தம: ஷம:।
ஸுகம் து:கம் பவோ அபாவோ பயம் சாபயமேவ ச॥ 10.4 ॥

அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்தபோ தாநம் யஷோ அயஷ:।
பவந்தி பாவா பூதாநாம் மத்த ஏவ ப்ருதக்விதா:॥ 10.5 ॥

புத்தி, ஞானம், விழிப்புணர்வு, பொறாமை, உண்மை, புலனடக்கம், மனக்கட்டுப்பாடு, சுகம், துக்கம், பிறப்பு, இறப்பு, பயம், பயமின்மை, அகிம்சை, சமநிலை, திருப்தி, தவம், தானம், புகழ்ச்சி, இகழ்ச்சி என்ற உயிரினங்களில் கானபடுகின்ற பல்வேறு தன்மைகள் என்னிடமிருந்தே உண்டாகின்றன.

மஹர்ஷய: ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா।
மத்பாவா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா:॥ 10.6 ॥

ஏழு மகரிஷிகளும், அவ்வாறே பண்டைய நான்கு மனுக்களும் எனது சங்கல்பத்திலிருந்து எனது இயல்புடன் பிறந்தார்கள். அவர்களிடமிருந்து உலகில் உயிரினங்கள் உண்டாயின.

ஏதாம் விபூதிம் யோகம் ச மம யோ வேத்தி தத்த்வத:।
ஸோ அவிகம்பேந யோகேந யுஜ்யதே நாத்ர ஸம்ஷய:॥ 10.7 ॥

என்னுடைய இந்த மகிமையையும் யோகத்தையும் யார் உள்ளபடி அறிகிறானோ, அவன் யோகத்தில் உறுதியாக நிலைபெருகிறான். இதில் சந்தேகம் இல்லை.

அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே।
இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமந்விதா:॥ 10.8 ॥

நான் எல்லாவற்றின் பிறப்பிடம், என்னிலிருந்தே அனைத்தும் செயல்பட தொடங்குகின்றன. இவ்வாறு அறிந்து, சான்றோர்கள் பக்தியுடன் என்னை வழிபடுகிறார்கள்.

மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம்।
கதயந்தஷ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச॥ 10.9 ॥

அவர்கள் என்னிடம் மனத்தை வைத்து, உயிரை எனக்கு உரியதாக்கி, ஒருவருக்கொருவர் என்னை பற்றி விளக்கம் தந்தும் எப்போதும் பேசியும் மன நிறைவு கொள்கிறார்கள். மகிழ்ச்சி அடைகிறார்கள்.

தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம்।
ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே॥ 10.10 ॥

எப்போதும் யோகத்தில் இருப்பவர்களும், அன்புடன் என்னை வழிபடுபவர்களும் ஆகிய அவர்களுக்கு நான் புத்தி யோகத்தை வழங்குகிறேன். அதன் மூலம் அவர்கள் என்னை வந்தடைகிறார்கள்.

தேஷாமேவாநுகம்பார்தமஹமஜ்ஞாநஜம் தம:।
நாஷயாம்யாத்மபாவஸ்தோ ஜ்ஞாநதீபேந பாஸ்வதா॥ 10.11 ॥

அவர்களிடம் கொண்ட கருணையால் நான் அவர்களின் உள்ளத்தில் வீற்றிருந்து, அறியாமை காரணமாக தோன்றிய இருளை பிரகாசிக்கின்ற ஞான தீபத்தினால் அகற்றுகிறேன்.

அர்ஜுன உவாச।
பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவாந்।
புருஷம் ஷாஷ்வதம் திவ்யமாதிதேவமஜம் விபும்॥ 10.12 ॥

ஹுஸ்த்வாம்ருஷய: ஸர்வே தேவர்ஷிர்நாரதஸ்ததா।
அஸிதோ தேவலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்ரவீஷி மே॥ 10.13 ॥

அர்ஜுனன் கூறினான்: நீ மேலான பிரம்மம், உயர்ந்த இருப்பிடம், ஒப்பற்ற புனித பொருள், எல்லா ரிஷிகளும், தேவ ரிஷியான நாரதரும், அஷிதர், தேவலர், வியாசர் போன்ற முனிவர்களும் உன்னை நிலையானவன், ஒளிமயமான இறைவன், முழுமுதற்கடவுள், பிறப்பற்றவன், எங்கும் நிறைந்தவன் என்றெல்லாம் போற்றுகிறார்கள். நீயும் அவ்வாறே சொல்கிறாய்.

ஸர்வமேதத்ருதம் மந்யே யந்மாம் வதஸி கேஷவ।
ந ஹி தே பகவந்வ்யக்திம் விதுர்தேவா ந தாநவா:॥ 10.14 ॥

கேசவா ! எனக்கு எதை சொல்கிறாயோ, அவை எல்லாம் உண்மை என்று கருதுகிறேன். பகவானே ! உனது உண்மை இயல்பை தேவர்களும் அறியவில்லை, அசுரர்களும் அறியவில்லை.

ஸ்வயமேவாத்மநாத்மாநம் வேத்த த்வம் புருஷோத்தம।
பூதபாவந பூதேஷ தேவதேவ ஜகத்பதே॥ 10.15 ॥

புருஷோத்தமா ! உயிர்களை படைத்தவனே, உயிர்களின் தலைவனே, தேவாதிதேவனே, உலகை ஆள்பவனே, உன்னை நீயே அறிவாய், உன்னால் மட்டுமே உன்னை அறிய முடியும். நீ அதை அறிகிறாய்.

வக்துமர்ஹஸ்யஷேஷேண திவ்யா ஹ்யாத்மவிபூதய:।
யாபிர்விபூதிபிர்லோகாநிமாம்ஸ்த்வம் வ்யாப்ய திஷ்டஸி॥ 10.16 ॥

எந்த மகிமைகளால் நீ உலகங்களை வியாப்பித்து, நிற்கிறாயோ, தெய்வீகமான உனது அந்த மகிமைகளை எனக்கு முற்றிலுமாக சொல்ல வேண்டும்.

கதம் வித்யாமஹம் யோகிம்ஸ்த்வாம் ஸதா பரிசிந்தயந்।
கேஷு கேஷு ச பாவேஷு சிந்த்யோ அஸி பகவந்மயா॥ 10.17 ॥

யோகி, நான் எப்போதும் தியானிப்பதன் மூலம் எப்படி உன்னை அறிவது? பகவானே ! உன்னை எந்தெந்த பாவனைகளில் தியானிக்க முடியும்?

விஸ்தரேணாத்மநோ யோகம் விபூதிம் ச ஜநார்தந।
பூய: கதய த்ருப்திர்ஹி ஷ்ருண்வதோ நாஸ்தி மே அம்ருதம்॥ 10.18 ॥

ஜனார்த்தனா ! உனது யோகத்தையும் மகிமையையும் மீண்டும் எனக்கு விரிவாக சொல்ல வேண்டும், ஏனெனில் அந்த அமுத மொழிகளை கேட்பதில் எனக்கு திருப்தியே வருவதில்லை .

ஸ்ரீபகவாநுவாச।
ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யா ஹ்யாத்மவிபூதய:।
ப்ராதாந்யத: குருஷ்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே॥ 10.19 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: குருகுல பெருவீரனே ! நல்லது, எனது தெய்வீக மகிமைகளில் முக்கியமானவற்றை மட்டும் உனக்கு சொல்கிறேன். ஏனெனில் எனது மகிமைகளுக்கு எல்லையே இல்லை.

அஹமாத்மா குடாகேஷ ஸர்வபூதாஷயஸ்தித:।
அஹமாதிஷ்ச மத்யம் ச பூதாநாமந்த ஏவ ச॥ 10.20 ॥

தூக்கத்தை வென்றவனே ! எல்லா உயிர்களின் இதயத்தில் இருக்கின்ற ஆன்மா நான். உயிர்களின் ஆரம்பமும் நடுவும் முடிவும் நானே.

ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஷுமாந்।
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஷஷீ॥ 10.21 ॥

நான் ஆதித்தர்களில் விஷ்ணு, ஒளிர்பவற்றில் கிரணங்களை உடைய சூரியன், மருத்துக்களில் மரிசியாக இருக்கிறேன். நட்சத்திரங்களில் நான் சந்திரன்.

வேதாநாம் ஸாமவேதோ அஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ:।
இந்த்ரியாணாம் மநஷ்சாஸ்மி பூதாநாமஸ்மி சேதநா॥ 10.22

நான் வேதங்களில் சாம வேதம், தேவர்களில் இந்திரன், புலன்களில் மனம், உயிர்களில் உணர்வு.

ருத்ராணாம் ஷங்கரஷ்சாஸ்மி வித்தேஷோ யக்ஷரக்ஷஸாம்।
வஸூநாம் பாவகஷ்சாஸ்மி மேரு: ஷிகரிணாமஹம்॥ 10.23 ॥

நான் ருத்திரர்களில் சங்கரன், யட்சர்கள் மற்றும் ரட்சஷர்களுள் செல்வத்திற்கு அதிபதியான குபேரனாகவும், வசுக்களில் அக்னியாகவும், சிகரமுள்ள மலைகளில் மேருவாகவும் நான் இருக்கிறேன்.

புரோதஸாம் ச முக்யம் மாம் வித்தி பார்த ப்ருஹஸ்பதிம்।
ஸேநாநீநாமஹம் ஸ்கந்த: ஸரஸாமஸ்மி ஸாகர:॥ 10.24 ॥

அர்ஜுனா ! புரோகிதர்களில் முக்கியமானவரான பிருகஸ்பதி நான். சேனாதிபதிகளில் கந்தனாகவும், நீர் நிலைகளில் கடலாகவும் நான் இருக்கிறேன்.

மஹர்ஷீணாம் ப்ருகுரஹம் கிராமஸ்ம்யேகமக்ஷரம்।
யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோ அஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய:॥ 10.25 ॥

நான் மகரிஷிகளில் பிருகு, மந்திரங்களுள் ஓரெழுத்து மந்திரமாகிய ஓங்காரம், வேல்விகளுள் ஜப வேள்வி, அசையாதவற்றில் இமயமலை.

அஷ்வத்த: ஸர்வவ்ருக்ஷாணாம் தேவர்ஷீணாம் ச நாரத:।
கந்தர்வாணாம் சித்ரரத: ஸித்தாநாம் கபிலோ முநி:॥ 10.26 ॥

நான் மரங்களில் அரச மரம், தேவ ரிஷிகளில் நாரதர், கந்தர்வர்களில் சித்ரரதன், சித்தர்களில் கபில முனிவன்.

உச்சை:ஷ்ரவஸமஷ்வாநாம் வித்தி மாமம்ருதோத்பவம்।
ஐராவதம் கஜேந்த்ராணாம் நராணாம் ச நராதிபம்॥ 10.27 ॥

நான் குதிரைகளில் பாற்கடலில் இருந்து தோன்றிய உச்சைசிரவசம், யானைகளில் ஐராவதம், மனிதர்களில் அரசன்.

ஆயுதாநாமஹம் வஜ்ரம் தேநூநாமஸ்மி காமதுக்।
ப்ரஜநஷ்சாஸ்மி கந்தர்ப: ஸர்பாணாமஸ்மி வாஸுகி:॥ 10.28 ॥

நான் ஆயுதங்களில் வஜ்ஜுராயுதம், பசுக்களில் காமதேனு, நான் உயிர்களை பிறப்பிக்கின்ற மன்மதனாக இருக்கின்றேன். சர்ப்பங்களில் வாசுகியாக இருக்கின்றேன்.

அநந்தஷ்சாஸ்மி நாகாநாம் வருணோ யாதஸாமஹம்।
பித்ருணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாமஹம்॥ 10.29 ॥

நாகங்களில் நான் அனந்தநாக இருக்கிறேன். ஜல தேவதைகளில் வருணன் நான். முன்னோர்களில் அறியமானாக இருக்கிறேன். ஒடுக்குபவர்களில் எமன் நான்.

ப்ரஹ்லாதஷ்சாஸ்மி தைத்யாநாம் கால: கலயதாமஹம்।
ம்ருகாணாம் ச ம்ருகேந்த்ரோ அஹம் வைநதேயஷ்ச பக்ஷிணாம்॥ 10.30 ॥

நான் அசுரர்களில் பிரகலாதன். கணிப்பவர்களில் காலம். மிருகங்களில் சிங்கம், பறவைகளில் கருடன்.

பவந: பவதாமஸ்மி ராம: ஷஸ்த்ரப்ருதாமஹம்।
ஜஷாணாம் மகரஷ்சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ॥ 10.31 ॥

நான் சஞ்சரிப்பவற்றுள் காற்று, ஆயுதம் தாங்கியவர்களில் நான் ராமன், மீன்களில் மகர மீன், நதிகளில் கங்கை.

ஸர்காணாமாதிரந்தஷ்ச மத்யம் சைவாஹமர்ஜுந।
அத்யாத்மவித்யா வித்யாநாம் வாத: ப்ரவததாமஹம்॥ 10.32 ॥

அர்ஜுனா ! படைப்பிற்கு ஆரம்பமும் நடுவும் முடிவும் நானே. வித்யைகளில் ஆத்ம வித்யை நான். வாதிடுபவர்களின் வாதம் நான்.

அக்ஷராணாமகாரோ அஸ்மி த்வந்த்வ: ஸாமாஸிகஸ்ய ச।
அஹமேவாக்ஷய: காலோ தாதா அஹம் விஷ்வதோமுக:॥ 10.33 ॥

நான் எழுத்துக்களில் அகரம், கூட்டு சொற்களில் இருசொற்கூட்டு, முடிவற்ற காலம் நானே. எங்கும் முகமுள்ளவனாக இருந்துகொண்டு நான் அனைவருடைய கர்மபலனை பகிர்ந்தளிக்கிறேன்.

ம்ருத்யு: ஸர்வஹரஷ்சாஹமுத்பவஷ்ச பவிஷ்யதாம்।
கீர்தி: ஸ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர்மேதா த்ருதி: க்ஷமா॥ 10.34 ॥

அனைத்தையும் அழிக்கின்ற மரணம் நான். செல்வந்தர்களின் செல்வம் நான். பெண்களின் சுய கௌரவம், அக அழகு, இனிய பேச்சு, துல்லிய நினைவு, கூறிய அறிவு, உறுதிப்பாடு, பொறுமை ஆகிய பண்புகளாக இருக்கிறேன்.

ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்।
மாஸாநாம் மார்கஷீர்ஷோ அஹம்ருதூநாம் குஸுமாகர:॥ 10.35 ॥

நான் ஷாமங்களில் பிருஹத் ஷாமம், சந்தஷ்களில் காயத்ரி, மாதங்களில் மார்கழி, பருவங்களில் வசந்தகாலம்.

த்யுதம் சலயதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம்।
ஜயோ அஸ்மி வ்யவஸாயோ அஸ்மி ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம்॥ 10.36 ॥

நான் வஞ்சகர்களின் சூதாட்டம், தேஜஷ்விகளின் தேஜஸ், வெற்றியாக முயற்சியாக இருப்பவன் நான். சாத்வீகர்களின் சத்வ குணம் நானே .

வ்ருஷ்ணீநாம் வாஸுதேவோ அஸ்மி பாண்டவாநாம் தநம்ஜய:।
முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஷநா கவி:॥ 10.37 ॥

நான் விருஷ்ணிகளில் வாசுதேவன், பாண்டவர்களில் அர்ஜுனன், முனிவர்களில் வியாசர், கவிஞர்களில் சுக்ராச்சரியார்.

தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம்।
மௌநம் சைவாஸ்மி குஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம்॥ 10.38 ॥

தண்டிப்பவர்களிடம் நான் தண்டனையாக இருக்கிறேன், வெற்றியை விரும்புபவர்களிடம் நீதியாக இருக்கிறேன், நான் ரகசியங்களில் மௌனம். ஞானிகளின் ஞானமாக இருப்பது நானே.

யச்சாபி ஸர்வபூதாநாம் பீஜம் ததஹமர்ஜுந।
ந ததஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூதம் சராசரம்॥ 10.39 ॥

அர்ஜுனா ! எல்லா உயிர்களுக்கும் எது விதையாகிறதோ, அது நான், அசைவதும் அசையாததுமான பொருள் எது இருக்கிறதோ அது என்னை தவிர வேறில்லை.

நாந்தோ அஸ்தி மம திவ்யாநாம் விபூதீநாம் பரம்தப।
ஏஷ தூத்தேஷத: ப்ரோக்தோ விபூதேர்விஸ்தரோ மயா॥ 10.40 ॥

எதிரிகளை வாட்டுபவனே ! எனது தெய்வீக மகிமைகளுக்கு முடிவு இல்லை. கோடிகாட்டுவது போல் இதுவரை சிலவற்றை சொன்னேன்.

யத்யத்விபூதிமத்ஸத்த்வம் ஸ்ரீமதூர்ஜிதமேவ வா।
தத்ததேவாவகச்ச த்வம் மம தேஜோம்ஷஸம்பவம்॥ 10.41 ॥

மிக மேலான மகிமையுடனும், ஐசுவரியத்துடனும் சோர்வற்ற முயற்சியுடனும் எவையெல்லாம் உள்ளனவோ அவை எல்லாம் எனது தேஜசின் ஒரு பகுதியால் உண்டானது என அறிந்துகொள்.

அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந।
விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்நமேகாம்ஷேந ஸ்திதோ ஜகத்॥ 10.42 ॥

அர்ஜுனா ! இவ்வாறு பலவற்றை அறிந்துகொல்வதால் உனக்கு ஆவதென்ன ? எனது ஓர் அம்சத்தால் இந்த பிரபஞ்சம் முழுவதையுமே தாங்குகிறேன்.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
விபூதியோகோ நாம தஷமோ அத்யாய:॥ 10 ॥

ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'விபூதி யோகம்' எனப் பெயர் படைத்த பத்தாவது அத்தியாயம் நிறைவுற்றது.

தொடரும்...

மேலும் மரண அறிவித்தல்களுக்கு