விஷ்வரூபதர்ஷன யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும் பாகம் - 58.

#history #Article #Tamil People
விஷ்வரூபதர்ஷன யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும் பாகம்  - 58.

பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத காதஷோ அத்யாய:।

விஷ்வரூபதர்ஷந யோகம்

(வாழ்க்கையின் மறுப்பக்கம்)

அர்ஜுன உவாச।
மதநுக்ரஹாய பரமம் குஹ்யமத்யாத்மஸம்ஜ்ஞிதம்।
யத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோ அயம் விகதோ மம॥ 11.1 ॥

அர்ஜுனன் கூறினான்: மேலான, ரகசியமான ஆத்மதத்துவத்தை பற்றி நீ கூறியருளியதால் எனது மனமயக்கம் போய்விட்டது.

பவாப்யயௌ ஹி பூதாநாம் ஷ்ருதௌ விஸ்தரஷோ மயா।
த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம்॥ 11.2 ॥

தாமரை இதழ் போன்ற கண்களை உடையவனே ! உயிர்களின் பிறப்பு இறப்பு பற்றியும் உனது எல்லையற்ற மகிமை பற்றியும் உன்னிடமிருந்தே நான் விரிவாக தெரிந்துகொண்டேன்.

ஏவமேதத்யதாத்த த்வமாத்மாநம் பரமேஷ்வர।
த்ரஷ்டுமிச்சாமி தே ரூபமைஷ்வரம் புருஷோத்தம॥ 11.3 ॥

பரமேசுவரா ! நீ உன்னை பற்றி சொன்னவை அனைத்தையும் அப்படியே உண்மை. புருஷோத்தமா ! இனி உனது தெய்வ வடிவை நான் காண விரும்புகிறேன்.

மந்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ।
யோகேஷ்வர ததோ மே த்வம் தர்ஷயாத்மாநமவ்யயம்॥ 11.4 ॥

எம்பெருமானே ! யோகேசுவரா ! அந்த தெய்வ வடிவத்தை காண நான் தகுதி பெற்றவன் என்று நீ கருதினால் அழிவற்ற அந்த உனது வடிவை எனக்கு காட்டி அருள்வாய்.

ஸ்ரீபகவாநுவாச।
பஷ்ய மே பார்த ரூபாணி ஷதஷோ அத ஸஹஸ்ரஷ:।
நாநாவிதாநி திவ்யாநி நாநாவர்ணாக்ருதீநி ச॥ 11.5 ॥

அர்ஜுனா ! பலவிதமான, தெய்வீகமான பல நிறங்களும், வடிவங்களும் உடைய எனது உருவங்களை நூற்றுக்கணக்காக ஆயிரக்கணக்காக பார்.

பஷ்யாதித்யாந்வஸூந்ருத்ராநஷ்விநௌ மருதஸ்ததா।
பஹூந்யத்ருஷ்டபூர்வாணி பஷ்யாஷ்சர்யாணி பாரத॥ 11.6 ॥

அர்ஜுனா ! ஆதித்தர்கள், வசுக்கள், ருத்திரர்கள், அசுவினிகள், மருத்துகள் என்று பலரையும் பார். இது வரை காணாத பல ஆச்சர்யங்களையும் பார்.

இஹைகஸ்தம் ஜகத்க்ருத்ஸ்நம் பஷ்யாத்ய ஸசராசரம்।
மம தேஹே குடாகேஷ யச்சாந்யத் த்ரஷ்டுமிச்சஸி॥ 11.7 ॥

தூக்கத்தை வென்றவனே ! அசைவதும் அசையாததுமாகிய உலகம் முழுவதையும் இன்னும் வேறு எதையெல்லாம் பார்க்க விரும்பினாயோ அவையெல்லாம் எனது இந்த உடம்பில் ஒன்று சேர்ந்து இருப்பதை இப்போது பார்.

ந து மாம் ஷக்யஸே த்ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷுஷா।
திவ்யம் ததாமி தே சக்ஷு: பஷ்ய மே யோகமைஷ்வரம்॥ 11.8 ॥

உனது இந்த கண்ணினால் என்னை பார்க்க இயலாது.எனவே உனக்கு தெய்வீக கண்ணை தருகிறேன். எனது யோக சக்தி மகிமையை பார்.

ஸம்ஜய உவாச।
ஏவமுக்த்வா ததோ ராஜந்மஹாயோகேஷ்வரோ ஹரி:।
தர்ஷயாமாஸ பார்தாய பரமம் ரூபமைஷ்வரம்॥ 11.9 ॥

சஞ்ஜயன் கூறினார்: மன்னா ! மகா யோகேசுவரராகிய கிருஷ்ணர் இவ்வாறு கூறிவிட்டு, மேலான தமது தெய்வீக வடிவை அர்ஜுனனுக்கு காட்டினார்.

அநேகவக்த்ரநயநமநேகாத்புததர்ஷநம்।
அநேகதிவ்யாபரணம் திவ்யாநேகோத்யதாயுதம்॥ 11.10 ॥

அந்த வடிவம் எண்ணற்ற முகங்களும் கண்களும் உடையது. பல அதிசிய காட்சிகள் நிறைந்தது. பல தெய்வீக ஆபரணங்கள் அணிந்து தெய்வீகமான பல ஆயுதங்கள் ஏந்தியது.

திவ்யமால்யாம்பரதரம் திவ்யகந்தாநுலேபநம்।
ஸர்வாஷ்சர்யமயம் தேவமநந்தம் விஷ்வதோமுகம்॥ 11.11 ॥

அந்த வடிவம் அழகிய மாலைகளும் ஆடைகளும் அணிந்தது. சிறந்த வாசனை திரவியங்கள் பூசியது. பெரும் வியப்பை ஊட்டுவது. ஒளியுடன் பிரகாசிப்பது. எல்லையற்றது. எங்கும் முகம் உடையது.

திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய பவேத்யுகபதுத்திதா।
யதி பா: ஸத்ருஷீ ஸா ஸ்யாத்பாஸஸ்தஸ்ய மஹாத்மந:॥ 11.12 ॥

ஆயிரம் சூரியர்கள் ஒரே நேரத்தில் ஆகாயத்தில் உதித்தால் அது பரம்பொருளின் ஒளிக்கு சமமாக இருக்கும்.

தத்ரைகஸ்தம் ஜகத்க்ருத்ஸ்நம் ப்ரவிபக்தமநேகதா।
அபஷ்யத்தேவதேவஸ்ய ஷரீரே பாண்டவஸ்ததா॥ 11.13 ॥

பலவிதமாக தோன்றுகின்ற பிரபஞ்சம் முழுவதும் அந்த தேவதேவனுடைய உடம்பில் ஒன்று சேர்ந்திருப்பதை அர்ஜுனன் அப்போது கண்டான்.

தத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ருஷ்டரோமா தநம்ஜய:।
ப்ரணம்ய ஷிரஸா தேவம் க்ருதாஞ்ஜலிரபாஷத॥ 11.14 ॥

உடனே அர்ஜுனன் வியப்புடனும், மயிர்சிலிர்ப்புடனும் அந்த தேவனை தலையால் வணங்கி கூப்பிய கைகளுடன் கூறலானான்.

அர்ஜுன உவாச।
பஷ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிஷேஷஸங்காந்।
ப்ரஹ்மாணமீஷம் கமலாஸநஸ்தம் க்ருஷீம்ஷ்ச ஸர்வாநுரகாம்ஷ்ச திவ்யாந்॥ 11.15 ॥

அர்ஜுனன் கூறினான்: எம்பெருமானே ! உனது திருமேனியில் எல்லா தேவர்களையும், பல்வேறு உயிரினங்களையும், தாமரையில் வீற்றியிருக்கின்ற பிரம்மாவையும், சிவனையும், எல்லா ரிஷிகளையும், தேவ சர்ப்பங்களையும் காண்கிறேன்.

அநேகபாஹூதரவக்த்ரநேத்ரம் பஷ்யாமி த்வாம் ஸர்வதோ அநந்தரூபம்।
நாந்தம் ந மத்யம் ந புநஸ்தவாதிம் பஷ்யாமி விஷ்வேஷ்வர விஷ்வரூப॥ 11.16 ॥

உலகின் தலைவனே ! எண்ணற்ற கைகளும் வயிறுகளும் வாய்களும் கண்களும் உடைய உனது எல்லையற்ற வடிவத்தை எங்கும் காண்கிறேன். உலக வடிவினனே ! உனது முடிவையோ நடுவையோ ஆரம்பத்தையோ காணமுடியவில்லை.

கிரீடிநம் கதிநம் சக்ரிணம் ச தேஜோராஷிம் ஸர்வதோ தீப்திமந்தம்।
பஷ்யாமி த்வாம் துர்நிரீக்ஷ்யம் ஸமந்தாத் தீப்தாநலார்கத்யுதிமப்ரமேயம்॥ 11.17 ॥

மகுடம் தரித்து கதை தாங்கி சக்கரம் ஏந்திய பேரொளி பிழம்பான எங்கும் பிரகாசிக்கின்ற கண்ணால் காண முடியாத சுடர் விடுகின்ற நெருப்பு போலவும் சூரியனை போலவும் ஒளிர்கின்ற அளவிட்டு அறியமுடியாத உன்னை எங்கும் காண்கின்றேன்.

த்வமக்ஷரம் பரமம் வேதிதவ்யம் த்வமஸ்ய விஷ்வஸ்ய பரம் நிதாநம்।
த்வமவ்யய: ஷாஷ்வததர்மகோப்தா ஸநாதநஸ்த்வம் புருஷோ மதோ மே॥ 11.18 ॥

நீ அழிவற்றவன், மேலானவன், அறியபடவேண்டியவன். இந்த பிரபஞ்சத்தின் மேலான இருப்பிடம் நீ. நீ மாறாதவன். தர்மத்தின் நிலையான காவலன். என்றென்றும் இருப்பவன் . நீயே இறைவன் என்பதை நான் உணர்கிறேன்.

அநாதிமத்யாந்தமநந்தவீர்யம் அநந்தபாஹும் ஷஷிஸூர்யநேத்ரம்।
பஷ்யாமி த்வாம் தீப்தஹுதாஷவக்த்ரம் ஸ்வதேஜஸா விஷ்வமிதம் தபந்தம்॥ 11.19 ॥

நீ ஆதி, நடு, முடிவு இல்லாதவன், எல்லையற்ற ஆற்றல் உடையவன், எண்ணற்ற கைகள் உடையவன், சந்திர சூரியர்களை கண்களாக கொண்டவன், சுடர் விடுகின்ற அக்னி போல் முகம் உடையவன், தேஜசால் இந்த பிரபஞ்சத்தை எரிப்பவனாக உன்னை நான் காண்கின்றேன்.

த்யாவாப்ருதிவ்யோரிதமந்தரம் ஹி வ்யாப்தம் த்வயைகேந திஷஷ்ச ஸர்வா:।
த்ருஷ்ட்வாத்புதம் ரூபமுக்ரம் தவேதம் லோகத்ரயம் ப்ரவ்யதிதம் மஹாத்மந்॥ 11.20 ॥

பரம்பொருளே ! விண்ணும் மண்ணும் இடைவெளியும் எல்லா திசைகளும் உன் ஒருவனாலேயே வியப்பிக்கபட்டுள்ளது. உனது இந்த உக்கிரமான அற்புத உருவை கண்டு மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.

அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா விஷந்தி கேசித்பீதா: ப்ராஞ்ஜலயோ க்ருணந்தி।
ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்தஸங்கா: ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி: புஷ்கலாபி:॥ 11.21 ॥

தேவர்கள் உன்னில் பிரவேசிக்கிறார்கள். சிலர் பயத்தால் கைகூப்பி உன்னை புகழ்கிறார்கள். வாழ்க என்று கூறி முனிவர்களும் சித்தர்களும் உன்னை அழகிய துதிகளால் போற்றுகிறார்கள்.

ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா விஷ்வேஷ்விநௌ மருதஷ்சோஷ்மபாஷ்ச।
கந்தர்வயக்ஷாஸுரஸித்தஸங்கா வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாஷ்சைவ ஸர்வே॥ 11.22 ॥

ருத்திரர்கள், ஆதித்தர்கள், வசுக்கள், சாத்தியர்கள், விசுவே தேவர்கள், அசுவினிகள், மருத்துக்கள், ஊஷ்மபர்கள், கந்தர்வர்கள், யட்சர்கள், அசுரர்கள், சித்தர்கள் எல்லோரும் திகைப்புடன் உன்னை பார்க்கிறார்கள்.

ரூபம் மஹத்தே பஹுவக்த்ரநேத்ரம் மஹாபாஹோ பஹுபாஹூருபாதம்।
பஹூதரம் பஹுதம்ஷ்ட்ராகராலம் த்ருஷ்ட்வா லோகா: ப்ரவ்யதிதாஸ்ததாஹம்॥ 11.23 ॥

பெரிய கைகளை உடையவனே ! பல முகங்கள், கண்கள், கைகள், தொடைகள், பாதங்கள், வயிறுகள், பயமுறுத்துகின்ற வளைந்த பல பற்கள் என்று காட்சியளிக்கின்ற உனது பெரிய உருவத்தை கண்டு உலகங்கள் நடுங்குகின்றன. நானும் நடுங்குகிறேன்.

நப:ஸ்ப்ருஷம் தீப்தமநேகவர்ணம் வ்யாத்தாநநம் தீப்தவிஷாலநேத்ரம்।
த்ருஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதிதாந்தராத்மா த்ருதிம் ந விந்தாமி ஷமம் ச விஷ்ணோ॥ 11.24 ॥

மகாவிஷ்ணுவே ! பல நிறங்களுடன் வானை தொடுவது போல் பிரகாசிக்கின்ற, திறந்த வாய்களை உடைய , கனல் வீசும் பெரிய கண்களை கொண்ட உன்னை கண்டு என் மனம் நடுங்குகிறது. தைரியமும் மன அமைதியும் என்னை விட்டு அகல்கின்றன.

தம்ஷ்ட்ராகராலாநி ச தே முகாநி த்ருஷ்ட்வைவ காலாநலஸந்நிபாநி।
திஷோ ந ஜாநே ந லபே ச ஷர்ம ப்ரஸீத தேவேஷ ஜகந்நிவாஸ॥ 11.25 ॥

தேவாதிதேவா ! பயமுறுத்துகின்ற கோரபற்கள் உடையதும் பிரளயகால அக்னிக்கு ஒப்பானதுமான உனது முகங்களை கண்டதும் என் மனம் நிலைகுலைந்து விட்டது. எனக்கு திசைகள் தெரியவில்லை, உலகிற்கு ஆதாரமாணவனே ! அருள் புரிவாய்.

அமீ ச த்வாம் த்ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா: ஸர்வே ஸஹைவாவநிபாலஸங்கை:।
பீஷ்மோ த்ரோண: ஸூதபுத்ரஸ்ததாஸௌ ஸஹாஸ்மதீயைரபி யோதமுக்யை:॥ 11.26 ॥

வக்த்ராணி தே த்வரமாணா விஷந்தி தம்ஷ்ட்ராகராலாநி பயாநகாநி।
கேசித்விலக்நா தஷநாந்தரேஷு ஸம்த்ருஷ்யந்தே சூர்ணிதைருத்தமாங்கை:॥ 11.27 ॥

இதோ திருதராஷ்டிரரின் பிள்ளைகள், மன்னர்கள் கூட்டம், பீஷ்மர், துரோணர், கர்ணன், நம்மவர்களுள் முக்கிய வீரர்கள் என்று அனைவரும் பயங்கரமான வளைந்த பற்கள் உடைய உனது வாய்களில் பரபரப்பாக புகுகிறார்கள். சிலர் தூளாக்கப்பட்ட தலைகளுடன் பல் இடுக்குகளில் அகப்பட்டு கிடக்கிறார்கள் .

யதா நதீநாம் பஹவோ அம்புவேகா: ஸமுத்ரமேவாபிமுகா த்ரவந்தி।
ததா தவாமீ நரலோகவீரா விஷந்தி வக்த்ராண்யபிவிஜ்வலந்தி॥ 11.28 ॥

நதிகளின் வேகம் மிக்க பல பிரவாகங்கள் எவ்வாறு கடலை நோக்கி பாய்கின்றனவோ, அவ்வாறே இந்த வீரர்களும் எங்கும் பிரகாசித்து கொண்டிருக்கின்ற உனது வாய்களில் புகுகிறார்கள்.

யதா ப்ரதீப்தம் ஜ்வலநம் பதங்கா விஷந்தி நாஷாய ஸம்ருத்தவேகா:।
ததைவ நாஷாய விஷந்தி லோகா: தவாபி வக்த்ராணி ஸம்ருத்தவேகா:॥ 11.29 ॥

விட்டிற்பூச்சிகள் அழிவதர்க்காக எவ்வாறு, சுடர் விட்டெரியும் தீயில் வெகு வேகமாக பாய்கின்றனவோ அவ்வாறே இந்த மனிதர்களும் அழிவதற்க்காகவே உனது வாய்களுள் மிகுந்த வேகத்துடன் புகுகிறார்கள்.

லேலிஹ்யஸே க்ரஸமாந: ஸமந்தாத் லோகாந்ஸமக்ராந்வதநைர்ஜ்வலத்பி:।
தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம் பாஸஸ்தவோக்ரா: ப்ரதபந்தி விஷ்ணோ॥ 11.30 ॥

திருமாலே ! சூழ்ந்துள்ள எல்லா உலகங்களையும் பிரகாசிக்கின்ற வாய்களால் விழுங்கி ருசி பார்கிறாய் நீ. உனது உக்கிரமான ஒளி எல்லா உலகையும் பிரகாசத்தால் நிரப்பியபடி எரிகிறது.

ஆக்யாஹி மே கோ பவாநுக்ரரூபோ நமோ அஸ்து தே தேவவர ப்ரஸீத।
விஜ்ஞாதுமிச்சாமி பவந்தமாத்யம் ந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவ்ருத்திம்॥ 11.31 ॥

பயங்கர உருவுடைய நீ யார் என்று எனக்கு சொல்வாய். உன்னை வணங்குகிறேன். உனது செயல்களை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. தேவர் தலைவா ! அருள் புரிக. முதல்வனாகிய உன்னை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

ஸ்ரீபகவாநுவாச।
காலோ அஸ்மி லோகக்ஷயக்ருத்ப்ரவ்ருத்தோ லோகாந்ஸமாஹர்துமிஹ ப்ரவ்ருத்த:।
க்ருதே அபி த்வாம் ந பவிஷ்யந்தி ஸர்வே யே அவஸ்திதா: ப்ரத்யநீகேஷு யோதா:॥ 11.32 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: உலகங்களை அழிக்கவல்ல காலம் நான். இங்கே உலகங்களை அழிக்க தலைபட்டிருக்கிறேன். நீ போரிட்டு கொல்லாவிட்டலும் எதிராளிகளின் படையில் யாரும் மிஞ்ச போவதில்லை.

தஸ்மாத்த்வமுத்திஷ்ட யஷோ லபஸ்வ ஜித்வா ஷத்ரூந் புங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்தம்।
மயைவைதே நிஹதா: பூர்வமேவ நிமித்தமாத்ரம் பவ ஸவ்யஸாசிந்॥ 11.33 ॥

இடது கையால் கூட அம்பு எய்பவனே ! எழுந்திரு, புகழ் பெரு, எதிரிகளை வென்று செல்வம் நிறைந்த அரசை அனுபவி. இவர்கள் முன்பே என்னால் கொல்லப்பட்டுவிட்டார்கள். நீ கருவியாக மட்டும் இரு.

த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச கர்ணம் ததாந்யாநபி யோதவீராந்।
மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மாவ்யதிஷ்டா யுத்யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்நாந்॥ 11.34 ॥

என்னால் கொல்லப்பட்டுவிட்ட துரோணர் , பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன் மற்றும் பிற போர்வீரர்களையும் நீ கொல். அஞ்சி வருந்தாதே. போரில் எதிரிகளை வெல்வாய். போர் செய்.

ஸம்ஜய உவாச।
ஏதச்ச்ருத்வா வசநம் கேஷவஸ்ய க்ருதாஞ்ஜலிர்வேபமாந: கிரீடீ।
நமஸ்க்ருத்வா பூய ஏவாஹ க்ருஷ்ணம் ஸகத்கதம் பீதபீத: ப்ரணம்ய॥ 11.35 ॥

சஞ்ஜயன் கூறினார்: கிருஷ்ணரின் இந்த வார்த்தைகளை கேட்டு அர்ஜுனன் நடுங்கியவனாய் கை கூப்பி, நமஸ்கரித்து, பயத்துடன் வணங்கி, வாய்குளறி அவரிடம் சொன்னேன்.

அர்ஜுன உவாச।
ஸ்தாநே ஹ்ருஷீகேஷ தவ ப்ரகீர்த்யா ஜகத்ப்ரஹ்ருஷ்யத்யநுரஜ்யதே ச।
ரக்ஷாம்ஸி பீதாநி திஷோ த்ரவந்தி ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்தஸங்கா:॥ 11.36 ॥

கிருஷ்ணா ! உனது மகிமையால் உலகம் மகிழ்கிறது.ஆனந்தம் அடைகிறது. ராட்சஷர்கள் பயந்து திசைகள் தோறும் ஓடுகிறார்கள். சித்தர்கள் அனைவரும் வணங்குகிறார்கள். இவையெல்லாம் உனக்கு பொருத்தமானதே.

கஸ்மாச்ச தே ந நமேரந்மஹாத்மந் கரீயஸே ப்ரஹ்மணோ அப்யாதிகர்த்ரே।
அநந்த தேவேஷ ஜகந்நிவாஸ த்வமக்ஷரம் ஸதஸத்தத்பரம் யத்॥ 11.37॥

பரம்பொருளே ! முடிவற்றவனே ! தேவர் தலைவனே, உலகின் ஆதாரமே, பிரம்மாவிற்கும் பெரியவனே, முதர்க்காரணமானவனே, தோன்றியதும் தோன்றாததும் அப்பாற்பட்டதுமான அழியா பொருள் நீயே, உன்னை ஏன் வணங்கமாட்டார்கள்.

த்வமாதிதேவ: புருஷ: புராண: த்வமஸ்ய விஷ்வஸ்ய பரம் நிதாநம்।
வேத்தாஸி வேத்யம் ச பரம் ச தாம த்வயா ததம் விஷ்வமநந்தரூப॥ 11.38 ॥

நீ முழுமுதற்கடவுள், பழமைகளுக்கெல்லாம் பழமையானவன், பிரபஞ்சத்தின் மேலான இருப்பிடம், எண்ணற்ற வடிவங்கள் உடையவன். அறிபவனும் அறியபடுபவனும் நீயே, மேலான நிலையாகவும் நீயே இருக்கிறாய், உலகம் உன்னாலேயே வியாப்பிக்கபட்டிருக்கிறது.

வாயுர்யமோ அக்நிர்வருண: ஷஷாங்க: ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹஷ்ச।
நமோ நமஸ்தே அஸ்து ஸஹஸ்ரக்ருத்வ: புநஷ்ச பூயோ அபி நமோ நமஸ்தே॥ 11.39 ॥

நீயே வாயு, எமன், அக்னி, வருணன், சந்திரன், பிரஜாபதி மற்றும் முப்பாட்டனாக இருக்கிறாய். உனக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். ஆயிரம் முறை இன்னும் அதற்கு மேலும் உனக்கு நமஸ்காரங்கள்.

நம: புரஸ்தாதத ப்ருஷ்டதஸ்தே நமோ அஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ।
அநந்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம் ஸர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி ஸர்வ:॥ 11.40 ॥

எல்லமானவனே ! உனக்கு முன்னாலும் பின்னாலும் நமஸ்காரம், எல்லா பக்கத்திலும் நமஸ்காரம். நீ அளவற்ற ஆற்றலும், எல்லையற்ற பராகிரமும் உடையவன். நீ அனைத்திலும் நன்றாக வியாப்பித்திருக்கிறாய். அதனால் அனைத்துமாக இருக்கிறாய்.

ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம் ஹே க்ருஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி।
அஜாநதா மஹிமாநம் தவேதம் மயா ப்ரமாதாத்ப்ரணயேந வா அபி॥ 11.41 ॥

யச்சாவஹாஸார்தமஸத்க்ருதோ அஸி விஹாரஷய்யாஸநபோஜநேஷு।
ஏகோ அதவாப்யச்யுத தத்ஸமக்ஷம் தத்க்ஷாமயே த்வாமஹமப்ரமேயம்॥ 11.42 ॥

அச்சுதா ! எல்லையற்றவனே ! உனது இந்த மகிமையை அறியாமல் நண்பன் என்று கருதி, கவனமின்றியோ, அன்பினாலோ, ஏ கிருஷ்ணா, ஏ யாதவா, ஏ நண்பா என்று அலட்சியமாக உன்னை அழைத்திருக்கிறேன். விளையாட்டு நேரங்களிலோ, ஓய்வு வேலையிலோ, சும்மா இருக்கும் போதோ, சாப்பாட்டு வேலையிலோ, தனிமையிலோ, பிறர் காணுமாறோ அவ்வாறு உன்னை அவமதித்ததை எல்லாம் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யஷ்ச குருர்கரீயாந்।
ந த்வத்ஸமோ அஸ்த்யப்யதிக: குதோ அந்யோ லோகத்ரயே அப்யப்ரதிமப்ரபாவ॥ 11.43 ॥

ஒப்பற்ற பெருமை உடையவனே ! அசைவதும் அசையாததும் நிறைந்த இந்த உலகின் தந்தை நீயே. பூஜிக்கதக்கவனும் மேலான குருவும் நீயே. மூன்று உலகங்களிலும் உனக்கு சமமானவர் இல்லை. உன்னை விட உயர்ந்தவர் யார் இருக்க முடியும்?

தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதாய காயம் ப்ரஸாதயே த்வாமஹமீஷமீட்யம்।
பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யு: ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்॥ 11.44 ॥

தேவா ! இறைவனும் போற்றதக்கவனுமாகிய உன்முன் நான் கீழே விழுந்து வணங்குகிறேன். அருள்புரிய வேண்டும். மகனை தந்தையும், நண்பனை நண்பனும், காதலியை காதலனும் பொருத்து கொள்வதுபோல் என்னை பொருத்து அருள் மாறு வேண்டுகிறேன்.

அத்ருஷ்டபூர்வம் ஹ்ருஷிதோ அஸ்மி த்ருஷ்ட்வா பயேந ச ப்ரவ்யதிதம் மநோ மே।
ததேவ மே தர்ஷய தேவ ரூபம் ப்ரஸீத தேவேஷ ஜகந்நிவாஸ॥ 11.45 ॥

தேவா ! தேவர் தலைவா உலகின் இருப்பிடமானவனே ! முன்பு காணாததை கண்டு மகிழ்கிறேன். ஆனாலும் பயத்தால் என் மனம் நடுங்குகிறது. ( இனிமை ததும்பும் ) அந்த பழைய உருவத்தையே எனக்கு காட்ட வேண்டும், அருள் புரிக.

கிரீடிநம் கதிநம் சக்ரஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ।
தேநைவ ரூபேண சதுர்புஜேந ஸஹஸ்ரபாஹோ பவ விஷ்வமூர்தே॥ 11.46 ॥

ஆயிரம் கைககள் உடையவனே, உலககெங்கும் நிறைந்த வடிவத்தை உடையவனே ! உன்னை முன் போலவே கிரீடம் தரித்தவனாக, கதை ஏன்தியவனாக, சக்கரத்தை கையில் தாங்கியவனாக நான் தரிசிக்க விரும்புகிறேன், நான்கு கைகள் உடைய அந்த உருவத்துடனேயே இருப்பாயாக.

ஸ்ரீபகவாநுவாச।
மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேதம் ரூபம் பரம் தர்ஷிதமாத்மயோகாத்।
தேஜோமயம் விஷ்வமநந்தமாத்யம் யந்மே த்வதந்யேந ந த்ருஷ்டபூர்வம்॥ 11.47 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: அர்ஜுனா ! ஒளிமயமானதும் எங்கும் நிறைந்ததும், முடிவற்றதும், முதலில் இருந்ததுமான எனது மேலான உருவத்தை மகிழ்ச்சி காரணமாக நான் எனது யோக சக்தியில் உனக்கு காட்டினேன். உன்னை தவிர வேறு யாரும் இந்த முன்பு இதனை கண்டதில்லை.

ந வேத யஜ்ஞாத்யயநைர்ந தாநை: ந ச க்ரியாபிர்ந தபோபிருக்ரை:।
ஏவம்ரூப: ஷக்ய அஹம் ந்ருலோகே த்ரஷ்டும் த்வதந்யேந குருப்ரவீர॥ 11.48 ॥

குரு குலத்து பெரு வீரனே ! இத்தகைய எனது விசுவ ரூபத்தை பூமியில் உன்னை தவிர வேறு யாரும் வேதங்களாலோ, யாகங்களாலோ, படிப்பாலோ, தானங்களாலோ, கிரியைகலாலோ தீவிர தவங்களாலோ காண இயலாது.

மா தே வ்யதா மா ச விமூடபாவோ த்ருஷ்ட்வா ரூபம் கோரமீத்ருங்மமேதம்।
வ்யபேதபீ: ப்ரீதமநா: புநஸ்த்வம் ததேவ மே ரூபமிதம் ப்ரபஷ்ய॥ 11.49 ॥

எனது கோரமான உருவத்தை பார்த்து உனக்கு பயமோ குழப்பமோ வேண்டும். பயம் நீங்கி மன மகிழ்ச்சியுடன் எனது பழைய உருவத்தை நன்றாக பார்.

ஸம்ஜய உவாச।
இத்யர்ஜுநம் வாஸுதேவஸ்ததோக்த்வா ஸ்வகம் ரூபம் தர்ஷயாமாஸ பூய:।
ஆஷ்வாஸயாமாஸ ச பீதமேநம் பூத்வா புந: ஸௌம்யவபுர்மஹாத்மா॥ 11.50 ॥

சஞ்ஜயன் கூறினார்: கிருஷ்ணர் அர்ஜுனனிடம் இப்படி சொல்லி சொந்த உருவத்தை மீண்டும் காட்டினார். அவ்வாறு பரம்பொருளாகிய கிருஷ்ணர் மீண்டும் இனிய வடிவம் தாங்கி, பயந்த அர்ஜுனனை தேற்றினார்.

அர்ஜுன உவாச।
த்ருஷ்ட்வேதம் மாநுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜநார்தந।
இதாநீமஸ்மி ஸம்வ்ருத்த: ஸசேதா: ப்ரக்ருதிம் கத:॥ 11.51 ॥

அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா ! உனது இந்த இனிய மனித வடிவை பார்த்து இப்போது நான் மனத்தெளிவு பெற்று இயல்பான நிலையை அடைந்து இருக்கிறேன்.

ஸ்ரீபகவாநுவாச।
ஸுதுர்தர்ஷமிதம் ரூபம் த்ருஷ்ட்வாநஸி யந்மம।
தேவா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் தர்ஷநகாங்க்ஷிண:॥ 11.52 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: எனது எந்த வடிவத்தை நீ கண்டிருக்கிறாயோ காண்பதற்கு அறியதான அதை எப்போதும் காண தேவர்களும் விரும்புகிறார்கள்.

நாஹம் வேதைர்ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா।
ஷக்ய ஏவம்விதோ த்ரஷ்டும் த்ருஷ்டவாநஸி மாம் யதா॥ 11.53 ॥

என்னை நீ எவ்வாறு கண்டிருக்கிறாயோ அவ்வாறு காண வேதங்களாலும் தவத்தாலும் தானங்களாலும் கூட முடியாது.

பக்த்யா த்வநந்யயா ஷக்ய அஹமேவம்விதோ அர்ஜுன।
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேந ப்ரவேஷ்டும் ச பரம்தப॥ 11.54 ॥

எதிரிகளை வாட்டுபவனே ! அர்ஜுனா ! ஒருமுகப்பட்ட பக்தியாலேயே இவ்வாறு என்னை உள்ளபடி அறியவும் காணவும் அடையவும் முடியும்.

மத்கர்மக்ருந்மத்பரமோ மத்பக்த: ஸங்கவர்ஜித:।
நிர்வைர: ஸர்வபூதேஷு ய: ஸ மாமேதி பாண்டவ॥ 11.55 ॥

அர்ஜுனா ! எனக்காக வேலை செய்பவன், என்னை கதியாகவும் கொள்பவன், எனது பக்தன், பற்றற்றவன், எந்த உயிரையும் வெருக்காதவன் யாரோ அவன் என்னை அடைகிறான்.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
விஷ்வரூபதர்ஷநயோகோ நாமைகாதஷோ அத்யாய:॥ 11 ॥

ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'விஷ்வரூபதர்ஷந யோகம்' எனப் பெயர் படைத்த பதினொன்றாவது அத்தியாயம் நிறைவுற்றது.

தொடரும்....