பக்தி யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 59

#history #Article #Tamil People
பக்தி யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 59

பன்னிரண்டாவது அத்தியாயம் (பக்தி யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத த்வாதஷோ அத்யாய:।

பக்தி யோகம்

(பக்தி செய்)

அர்ஜுன உவாச।
ஏவம் ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாம் பர்யுபாஸதே।
யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா:॥ 12.1 ॥

அர்ஜுனன் கேட்டது : எப்போதும் யோகத்தில் நிலைத்திருந்து உன்னை வழிபடுபவர்கள், புலன்களால் அறிய முடியாத அழிவற்ற பிரம்மத்தை நாடுபவர்கள் – இவர்களுள் யோகத்தை நன்றாக அறிந்தவர்கள் யார் ?

ஸ்ரீபகவாநுவாச।
மய்யாவேஷ்ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே।
ஷ்ரத்தயா பரயோபேதா: தே மே யுக்ததமா மதா:॥ 12.2 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: மனத்தை என்னிடம் வைத்து, யோக பக்தியில் நிலைபெற்று, மேலான சிரத்தையுடன் யார் என்னை வழிபடுகிறார்களோ அவர்கள் மேலான யோகிகள் என்பது எனது கருத்து.

யே த்வக்ஷரமநிர்தேஷ்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே।
ஸர்வத்ரகமசிம்த்யம்ச கூடஸ்தம் அசலம்த்ருவம்॥ 12.3 ॥

ஸம்நியம்யேந்த்ரியக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தயா:।
தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதா:॥ 12.4 ॥

புலன் கூட்டங்களை நன்றாக வசபடுத்தி, எல்லோரிடமும் சமநோக்குடன் எல்லா உயிர்களுக்கும் நன்மையை விரும்பி, சொல்லால் விளக்க முடியாததும் எங்கும் நிறைந்ததும், சிந்தனைக்கு எட்டாததும், மாறாததும், அசைவற்றதும், நிலைத்ததும், அழிவற்றதுமான பிரம்மத்தை வழிபடுபவர்களும் என்னையே அடைகிறார்கள்.

க்லேஷோ அதிகதரஸ்தேஷாம் அவ்யக்தாஸக்தசேதஸாம்।
அவ்யக்தாஹி கதிர்து:கம் தேஹவத்பிரவாப்யதே॥ 12.5 ॥

நிர்க்குண பிரம்மத்தில் மனத்தை வைக்கின்ற அவர்களுக்கு முயற்சி அதிகம் வேண்டும். ஏனெனில் உடலுனர்வு உடையவர்களுக்கு நிர்க்குண பிரம்ம நெறி மிகவும் கடினமானதாகும்.

யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸம்ந்யஸ்ய மத்பர:।
அநந்யேநைவ யோகேந மாம் த்யாயந்த உபாஸதே॥ 12.6 ॥

தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ருத்யுஸம்ஸாரஸாகராத்।
பவாமி ந சிராத்பார்த மய்யாவேஷிதசேதஸாம்॥ 12.7 ॥

அர்ஜுனா ! யார் எல்லா செயல்களையும் எனக்கு அர்ப்பனித்துவிட்டு, என்னையே மேலான கதியாக கொண்டு, வேறெதையும் நாடாத யோகத்தால் என்னையே தியானித்து வழிபடுகிறார்களோ, என்னிடம் மனத்தை செலுத்துகின்ற அவர்கள் மரணம் நிறைந்ததான வாழ்க்கை கடலிலிருந்து நான் விரைவில் கரையேற்றுகிறேன்.

அப்யாஸே அப்யஸமர்தோ அஸி மத்கர்மபரமோ பவ।
மதர்தமபி கர்மாணி குர்வந்ஸித்திமவாப்ஸ்யஸி॥ 12.10 ॥

ஒழுங்காக பயிற்சியில் ஈடுபட முடியாவிட்டால் எனக்காக வேலை செய். எனக்காக வேலை செய்வதன் மூலம் நிறைநிலையை அடைவாய்.

அதைததப்யஷக்தோ அஸி கர்தும் மத்யோகமாஷ்ரித:।
ஸர்வகர்மபலத்யாகம் தத: குரு யதாத்மவாந்॥ 12.11 ॥

இதை கூட செய்ய முடியாவிட்டால், பிறகு என்னில் இணைந்தவனாக, தஞ்சம் அடைந்தவனாக , சுயகட்டுப்பாட்டுடன் வேலை செய்து எல்லா வேலைகளின் பலன்களையும் துறந்துவிடு.

ஷ்ரேயோ ஹி ஜ்ஞாநமப்யாஸாஜ்ஜ்ஞாநாத்த்யாநம் விஷிஷ்யதே।
த்யாநாத்கர்மபலத்யாகஸ்த்யாகாச்சாம்திரநந்தரம்॥ 12.12 ॥

பயிற்சியை விட அறிவு மேலானது. அறிவை விட ஆழ்ந்த சிந்தனை சிறந்தது. ஆழ்ந்த சிந்தனையை விட வேலைகளின் பலன்களை துறப்பது மேலானது. ஏனெனில் தியாகத்திலிருந்து விரைவில் அமைதி கிடைக்கிறது.

அத்வேஷ்டா ஸர்வபூதாநாம் மைத்ர: கருண ஏவ ச।
நிர்மமோ நிரஹங்கார: ஸமது:கஸுக: க்ஷமீ॥ 12.13 ॥

ஸம்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருடநிஷ்சய:।
மய்யர்பிதமநோபுத்திர்யோ மத்பக்த: ஸ மே ப்ரிய:॥ 12.14 ॥

எந்த உயிரிடமும் வெருப்பற்றவனாக, நண்பனாக, கருணை உடையவனாக, எனது என்ற எண்ணம் இல்லாதவனாக ஆணவம் அற்றவனாக, சுகதுக்கங்களில் சமமாக இருப்பவனாக, பொறுமை உடையவனாக, எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக, யோகியாக, சுயகட்டுப்பாடு உடையவனாக, அசைக்க முடியாத உறுதி உடையவனாக, என்னிடம் மனம் மற்றும் புத்தியை அர்ப்பணித்தவனாக உள்ள பக்தன் எனக்கு பிரியமானவன்.

யஸ்மாந்நோத்விஜதே லோகோ லோகாந்நோத்விஜதே ச ய:।
ஹர்ஷாமர்ஷபயோத்வேகைர்முக்தோ ய: ஸ ச மே ப்ரிய:॥ 12.15

யாரால் உலகம் துன்பபடுவதில்லையோ, யார் உலகத்தால் துன்புருவதால், யார் களிப்பு, கோபம், பயம், கலக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டவனோ, அவன் எனக்கு பிரியமானவன்.

அநபேக்ஷ: ஷுசிர்தக்ஷ உதாஸீநோ கதவ்யத:।
ஸர்வாரம்பபரித்யாகீ யோ மத்பக்த: ஸ மே ப்ரிய:॥ 12.16 ॥

ஆசையற்ற, தூய, திறமைசாலியான, பற்றற்ற, பயம் இல்லாத, எல்லா விதத்திலும் தன்முனைப்புடன் ( Ego ) செயல்புரிவதை விட்ட எனது பக்தன் எனக்கு பிரியமானவன்.

யோ ந ஹ்ருஷ்யதி ந த்வேஷ்டி ந ஷோசதி ந காங்க்ஷதி।
ஷுபாஷுபபரித்யாகீ பக்திமாந்ய: ஸ மே ப்ரிய:॥ 12.17 ॥

யார் மகிழ்வதில்லையோ, வெருப்பதில்லையோ, வருந்துவதில்லையோ, ஆசைபடுவதில்லையோ, நன்மை தீமைகளை விட்டவனோ, பக்தியுடையவனோ அவன் எனக்கு பிரியமானவன்.

ஸம: ஷத்ரௌ ச மித்ரே ச ததா மாநாபமாநயோ:।
ஷீதோஷ்ணஸுகது:கேஷு ஸம: ஸங்கவிவர்ஜித:॥ 12.18 ॥

துல்யநிந்தாஸ்துதிர்மௌநீ ஸம்துஷ்டோ யேந கேநசித்।
அநிகேத: ஸ்திரமதிர்பக்திமாந்மே ப்ரியோ நர:॥ 12.19 ॥

எதிரி – நண்பன், மானம் – அவமானம், குளிர் – சூடு, சுகம் – துக்கம் போன்ற இருமைகளில் சமமாக இருப்பவன், பற்றற்றவன், புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டையும் சமமாக கருதுபவன், மெளனமாக இருப்பவன், கிடைத்ததை கொண்டு திருப்தி அடைபவன், இருப்பிடம் இல்லாதவன், நிலைத்த அறிவு உடையவன், பக்தி உடையவன் எனக்கு பிரியமானவன்.

யே து தர்ம்யாம்ருதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே।
ஷ்ரத்ததாநா மத்பரமா பக்தாஸ்தே அதீவ மே ப்ரியா:॥ 12.20 ॥

எந்த பக்தர்கள் சிரத்தையுடன் என்னையே கதியாக கொண்டு இங்கே கூறியது போல் இந்த அமுதம் போன்ற தர்மத்தை கடைபிடிக்கிறார்களோ அவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
பக்தியோகோ நாம த்வாதஷோ அத்யாய:॥ 12 ॥

ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'பக்தி யோகம்' எனப் பெயர் படைத்த பன்னிரண்டாவது அத்தியாயம் நிறைவுற்றது.