குணத்ரயவிபாக யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 61.

#history #Article #Tamil People
குணத்ரயவிபாக யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 61.

பதினான்காவது அத்தியாயம் (குணத்ரயவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத சதுர்தஷோ அத்யாய:।

குணத்ரயவிபாக யோகம்

(மூன்று குணங்கள்)

ஸ்ரீபகவாநுவாச।
பரம் பூய: ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்ஞாநமுத்தமம்।
யஜ்ஜ்ஞாத்வா முநய: ஸர்வே பராம் ஸித்திமிதோ கதா:॥ 14.1

ஸ்ரீ பகவான் கூறினார்: எதை அறிந்து, எல்லா முனிவர்களும் மேலான நிலையை அடைந்தார்களோ, ஞானங்களுள் மிக சிறந்ததும் மேலானதுமான அந்த ஞானத்தை மீண்டும் சொல்கிறேன்.

இதம் ஜ்ஞாநமுபாஷ்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா:।
ஸர்கே அபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச॥ 14.2 ॥

இந்த ஞானத்தை பெற்று எனது நிலையை அடைந்தவர்கள் படைப்பின்போது பிறப்பதில்லை. பிரளய காலத்திலும் கலங்குவதில்லை.

மம யோநிர்மஹத் ப்ரஹ்ம தஸ்மிந்கர்பம் ததாம்யஹம்।
ஸம்பவ: ஸர்வபூதாநாம் ததோ பவதி பாரத॥ 14.3 ॥

அர்ஜுனா ! பெரியதான மாயை எனது கருப்பை. அதில் நான் விதையை வைக்கிறேன். அதிலிருந்து எல்லா உயிர்களின் உற்பத்தி உண்டாகின்றன.

ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்பவந்தி யா:।
தாஸாம் ப்ரஹ்ம மஹத்யோநிரஹம் பீஜப்ரத: பிதா॥ 14.4 ॥

அர்ஜுனா ! கருப்பைகளில் பிறக்கின்ற உயிரினங்கள் அனைத்திற்கும் பிறப்பிடம் பெரியதான மாயை. விதையை கொடுக்கின்ற தந்தை நான்.

ஸத்த்வம் ரஜஸ்தம இதி குணா: ப்ரக்ருதிஸம்பவா:।
நிபத்நந்தி மஹாபாஹோ தேஹே தேஹிநமவ்யயம்॥ 14.5 ॥

பெரிய தோள்களை உடையவனே ! மாயையிலிருந்து தோன்றிய சத்வம், தமஸ், ரஜஸ் என்ற மூன்று குணங்களும் அழிவற்றவனான மனிதனை உடம்பில் பிணைக்கிறது.

தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஷகமநாமயம்।
ஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக॥ 14.6 ॥

பாவமற்றவனே ! அவற்றுள் சத்வ குணம் களங்கம் இல்லாததால் ஒளி பொருந்தியது. கேடற்றது. சுகம் மற்றும் ஞானத்தின் மீதுள்ள பற்றின் வாயிலாக அது மனிதனை பிணைக்கிறது.

ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணாஸங்கஸமுத்பவம்।
தந்நிபத்நாதி கௌந்தேய கர்மஸங்கேந தேஹிநம்॥ 14.7 ॥

குந்தியின் மகனே ! ரஜோ குணம் ஆசை வடிவானது. வேட்கையையும் பற்றையும் உண்டாக்குவது என்று அறிந்துகொள், செயல் மீது கொள்கின்ற பற்றுதலால் அது மனிதனை கட்டுகிறது.

தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்தி மோஹநம் ஸர்வதேஹிநாம்।
ப்ரமாதாலஸ்யநித்ராபிஸ்தந்நிபத்நாதி பாரத॥ 14.8 ॥

அர்ஜுனா ! தமோ குணமோ அறியாமையில் பிறந்தது. எல்லோருக்கும் மனமயக்கம் தருவது என்று அறிந்துகொள். அது கவனமின்மை, சோம்பல், தூக்கம் ஆகியவற்றால் மனிதனை கட்டுகிறது.

ஸத்த்வம் ஸுகே ஸம்ஜயதி ரஜ: கர்மணி பாரத।
ஜ்ஞாநமாவ்ருத்ய து தம: ப்ரமாதே ஸம்ஜயத்யுத॥ 14.9 ॥

அர்ஜுனா ! சத்வ குணம் சுகத்தில் இணைக்கிறது, ரஜோ குணம் செயலில் இணைக்கிறது, தமோ குணமோ ஞானத்தை மறைத்து கவனமின்மையில் இணைக்கிறது.

ரஜஸ்தமஷ்சாபிபூய ஸத்த்வம் பவதி பாரத।
ரஜ: ஸத்த்வம் தமஷ்சைவ தம: ஸத்த்வம் ரஜஸ்ததா॥ 14.10 ॥

அர்ஜுனா ! சத்வ குணம் ரஜசையும் தமசையும், ரஜோ குணம் சத்வத்தையும் தமசையும், அவ்வாறே, தமோ குணம் ரஜசையும் சத்வத்தையும் அடக்கி மேலெழுகிறது.

ஸர்வத்வாரேஷு தேஹே அஸ்மிந்ப்ரகாஷ உபஜாயதே।
ஜ்ஞாநம் யதா ததா வித்யாத்விவ்ருத்தம் ஸத்த்வமித்யுத॥ 14.11 ॥

இந்த உடம்பின் எல்லா வாசல்களிலும் எப்போது அறிவின் ஒளி பிரகாசிக்கின்றதோ அப்போது சத்வ குணம் ஓங்கியுள்ளது என்று அறிந்துகொள்.

லோப: ப்ரவ்ருத்திராரம்ப: கர்மணாமஷம: ஸ்ப்ருஹா।
ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே பரதர்ஷப॥ 14.12 ॥

அர்ஜுனா ! ரஜோ குணம் மேலெழும் போது பேராசை புறநாட்டம், கர்மங்களை ஆரம்பித்தல், கட்டுப்பாடின்மை, ஆசை ஆகியவை உண்டாகின்றன.

அப்ரகாஷோ அப்ரவ்ருத்திஷ்ச ப்ரமாதோ மோஹ ஏவ ச।
தமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே குருநந்தந॥ 14.13 ॥

குரு குலத்தில் உதித்தவனே ! தமோ குணம் மேலெழும் போது விவேகமின்மை, முயற்சியின்மை, கவனமின்மை, மனமயக்கம் ஆகியவை உண்டாகிறது.

யதா ஸத்த்வே ப்ரவ்ருத்தே து ப்ரலயம் யாதி தேஹப்ருத்।
ததோத்தமவிதாம் லோகாநமலாந்ப்ரதிபத்யதே॥ 14.14 ॥

சத்வ குணம் ஓங்கியிருக்கும் போது இறப்பவன் மேலான உண்மையை அறிந்தவர்கள் செல்கின்ற மாசற்ற உலகங்களை அடைகிறான்.

ரஜஸி ப்ரலயம் கத்வா கர்மஸங்கிஷு ஜாயதே।
ததா ப்ரலீநஸ்தமஸி மூடயோநிஷு ஜாயதே॥ 14.15 ॥

ரஜோ குணம் ஓங்கிய நிலையில் இறப்பவன் செயல் நாட்டம் உடையவர்களிடம் பிறக்கிறான். தமோ குணம் ஓங்கிய நிலையில் இறப்பவன் முட்டாள்களின் கருவில் பிறக்கிறான்.

கர்மண: ஸுக்ருதஸ்யாஹு: ஸாத்த்விகம் நிர்மலம் பலம்।
ரஜஸஸ்து பலம் து:கமஜ்ஞாநம் தமஸ: பலம்॥ 14.16 ॥

நற்செயல்களின் பலனாக அகநாட்டமும் தூய்மையும் உண்டாகிறது. ரஜோ குண செயல்களின் பலன் துன்பம், தமோ குண செயல்களின் பலனோ அறியாமை என்கிறார்கள்.

ஸத்த்வாத்ஸம்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச।
ப்ரமாதமோஹௌ தமஸோ பவதோ அஜ்ஞாநமேவ ச॥ 14.17 ॥

சத்வ குணத்திலிருந்து ஞானம் பிறக்கிறது. ரஜசிலிருந்து பேராசை பிறக்கிறது. தமசிலிருந்து அறியாமையும் கவனமினமையும் மனமயக்கமும் உண்டாகின்றன.

ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வஸ்தா மத்யே திஷ்டந்தி ராஜஸா:।
ஜகந்யகுணவ்ருத்திஸ்தா அதோ கச்சந்தி தாமஸா:॥ 14.18 ॥

சத்வ குணத்தினர் உயர் லச்சியங்களை நோக்கி போகிறார்கள். ரஜோ குணத்தினர் இடையில் நிற்கிறார்கள். இழிந்த குணமான தமோ குணத்தினர் கீழானவற்றை நாடுகிறார்கள்.

நாந்யம் குணேப்ய: கர்தாரம் யதா த்ரஷ்டாநுபஷ்யதி।
குணேப்யஷ்ச பரம் வேத்தி மத்பாவம் ஸோ அதிகச்சதி॥ 14.19 ॥

மனிதன் குணங்களை தவிர வேறு கர்த்தாவை எப்போது காண்பதில்லையோ, குணங்களுக்கு மேலானதாக அறிகிறானோ அவன் எனது சொரூபத்தை அடைகிறான்.

குணாநேதாநதீத்ய த்ரீந்தேஹீ தேஹஸமுத்பவாந்।
ஜந்மம்ருத்யுஜராது:கைர்விமுக்தோ அம்ருதமஷ்நுதே॥ 14.20 ॥

உடம்பை உண்டாக்கிய இந்த மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகிய துக்கங்களிலிருந்து விடுபட்டவன் மரணமில்லா பெருநிலையை அடைகிறான்.

அர்ஜுன உவாச।
கைர்லிங்கைஸ்த்ரீந்குணாநேதாநதீதோ பவதி ப்ரபோ।
கிமாசார: கதம் சைதாம்ஸ்த்ரீந்குணாநதிவர்ததே॥ 14.21 ॥

அர்ஜுனன் கேட்டது : கிருஷ்ணா ! இந்த மூன்று குணங்களையும் கடந்தவனின் அடையாளங்கள் என்ன ? நடத்தை எப்படி இருக்கும் ? அவன் இந்த குணங்களை எவ்வாறு கடக்கிறான் ?

ஸ்ரீபகவாநுவாச।
ப்ரகாஷம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹமேவ ச பாண்டவ।
த த்வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தாநி ந நிவ்ருத்தாநி காங்க்ஷதி॥ 14.22 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: அர்ஜுனா ! ஒளியும் செயலும் மனமயக்கமும் வரும் போது அவன் வெறுப்பதில்லை, வராத போது நாடுவதுமில்லை.

உதாஸீநவதாஸீநோ குணைர்யோ ந விசால்யதே।
குணா வர்தந்த இத்யேவ யோ அவதிஷ்டதி நேங்கதே॥ 14.23 ॥

யார் சாட்சி போல் இருந்துகொண்டு, குணங்களால் அலைகழிக்கபடுவதில்லையோ, குணங்களே செயல்படுகின்றன என்று உறுதியாய் இருக்கிறானோ, அந்த உறுதியில் இருந்து விலகாமல் இருக்கின்றானோ அவன் மூன்று குணங்களையும் கடந்தவன்.

ஸமது:கஸுக: ஸ்வஸ்த: ஸமலோஷ்டாஷ்மகாம்சந:।
துல்யப்ரியாப்ரியோ தீரஸ்துல்யநிந்தாத்மஸம்ஸ்துதி:॥ 14.24 ॥

சொந்த இயல்பில் நிலைத்திருப்பவன், துன்பம்- இன்பம், மண், கல், பொன், இனியது, இனிமையற்றது, இகழ்ச்சி – புகழ்ச்சி, ஆகியவற்றை சமமாக கருதுபவன், தெளிந்த அறிவுடையவன் --- இத்தகையவன் மூன்று குணங்களையும் கடந்தவன்.

மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ:।
ஸர்வாரம்பபரித்யாகீ குணாதீத: ஸ உச்யதே॥ 14.25 ॥

மானத்திலும் அவமானத்திலும் சமமாக இருப்பவன், நண்பனிடமும் பகைவனிடமும் சமமாக இருப்பவன், தானாக முனைந்து செயலில் ஈடுபடுவதை தவிர்ப்பவன் குணங்களை கடந்தவன் என்று சொல்லபடுகின்றான்.

மாம் ச யோ அவ்யபிசாரேண பக்தியோகேந ஸேவதே।
ஸ குணாந்ஸமதீத்யைதாந்ப்ரஹ்மபூயாய கல்பதே॥ 14.26 ॥

மாறாத பக்தி யோகத்தால் யார் என்னை வழிபடுகிறானோ, அவன் இந்த குணங்களை முற்றிலும் கடந்து, இறைநிலையை அடைவதற்கு தகுதி பெறுகிறான்.

ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச।
ஷாஷ்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச॥ 14.27 ॥

ஏனெனில் பிரம்மத்திற்கும், அழிவற்ற மோட்ச நிலைக்கும், நிலையான தர்மத்திற்கும், ஒப்பற்ற சுகத்திற்கும் இருப்பிடம் நானே.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
குணத்ரயவிபாகயோகோ நாம சதுர்தஷோ அத்யாய:॥ 14 ॥

ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'குணத்ரயவிபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதினான்காவது அத்தியாயம் நிறைவுற்றது.