புருஷோத்தம யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 62.

#history #Article #Tamil People
புருஷோத்தம யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 62.

பதினைந்தாவது அத்தியாயம் புருஷோத்தம யோகம் - பகவத் கீதை

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத பம்சதஷோ அத்யாய:।

புருஷோத்தம யோகம்

(வாழ்க்கை மரம்)

ஸ்ரீபகவாநுவாச।
ஊர்த்வமூலமத:ஷாகமஷ்வத்தம் ப்ராஹுரவ்யயம்।
சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத ஸ வேதவித்॥ 15.1 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: மேலே வேர் உள்ளதும் கீழே கிளைகள் உள்ளதுமாகிய அரசமரத்தை அழிவற்றதாக கூறுகின்றனர். வேதங்கள் அதன் இலைகள். அந்த மரத்தை யார் அறிகிறானோ அவன் உண்மையை அறிந்தவன்.

அதஷ்சோர்த்வம் ப்ரஸ்ருதாஸ்தஸ்ய ஷாகா குணப்ரவ்ருத்தா விஷயப்ரவாலா:।
அதஷ்ச மூலாந்யநுஸம்ததாநி கர்மாநுபந்தீநி மநுஷ்யலோகே॥ 15.2 ॥

அதன் கிளைகள் குணங்களால் செழிப்படைந்து, விஷயங்களாக தளிர்விட்டு கீழும் மேலும் படர்ந்து இருக்கின்றன. அதன் விழுதுகள் மானிட உலகில் செயல்களை விளைவிப்பவனாய் கீழ் நோக்கி பரவியிருக்கின்றன.

ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே நாந்தோ ந சாதிர்ந ச ஸம்ப்ரதிஷ்டா।
அஷ்வத்தமேநம் ஸுவிரூடமூலம் அஸங்கஷஸ்த்ரேண த்ருடேந சித்த்வா॥ 15.3 ॥

இங்கே அதன் உருவமோ அதன் முடிவோ ஆரம்பமோ தென்படுவதில்லை. அதற்கு நிலைத்த தன்மையும் இல்லை. நன்றாக வேரூன்றிய இந்த அரச மரத்தை பற்றின்மை என்னும் திடமான வாளால் வெட்டி வீழ்த்தவேண்டும்.

தத: பதம் தத்பரிமார்கிதவ்யம் யஸ்மிந்கதா ந நிவர்தந்தி பூய:।
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே।
யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ॥ 15.4 ॥

எங்கே சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவதில்லையோ அந்த இடத்தை தேடவேண்டும். ஆரம்பத்தில் படைப்பு யாரிடமிருந்து தோன்றியதோ, அந்த முதல்வனான இறைவனையே சரணடைய வேண்டும்.

நிர்மாநமோஹா ஜிதஸங்கதோஷா அத்யாத்மநித்யா விநிவ்ருத்தகாமா:।
த்வந்த்வைர்விமுக்தா: ஸுகது:கஸம்ஜ்ஞை: கச்சந்த்யமூடா: பதமவ்யயம் தத்॥ 15.5 ॥

அகங்காரமும் மனமயக்கமும் நீங்கிய, பற்று என்னும் குற்றத்தை வென்ற, ஆன்ம உணர்வில் நிலை பெற்ற, ஆசைகளை விட்ட, இன்ப துன்பம் போன்ற இருமைகளிலிருந்து விடுபட்ட குழப்பம் இல்லாத மகான்கள் அழிவற்ற அந்த நிலையை அடைகின்றனர்.

ந தத்பாஸயதே ஸூர்யோ ந ஷஷாங்கோ ந பாவக:।
யத்கத்வா ந நிவர்தம்தே தத்தாம பரமம் மம॥ 15.6 ॥

எங்கு சென்றவர்கள் திரும்பி வருவதில்லையோ, அது என்னுடைய மேலான இருப்பிடம், அந்த இடத்தை சூரியனும், சந்திரனும், அக்னியும் விளக்குவது இல்லை.

மமைவாம்ஷோ ஜீவலோகே ஜீவபூத: ஸநாதந:।
மந:ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதிஸ்தாநி கர்ஷதி॥ 15.7 ॥

எனது அம்சமே உலகில் உயிர்களாக தோன்றி என்றென்றும் இருக்கிறது. இயற்கையில் நிலைபெற்றதும் மனத்தை ஆறாவதாக உடையதுமான புலன்களை எனது அம்சமே உலக இன்பங்களை நோக்கி இழுத்து செல்கிறது.

ஷரீரம் யதவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீஷ்வர:।
க்ருஹித்வைதாநி ஸம்யாதி வாயுர்கம்தாநிவாஷயாத்॥ 15.8 ॥

மனங்களுக்கு இருப்பிடமாகிய மலர்களிலிருந்து மனங்களை கிரகித்துகொண்டு காற்று செல்வது போல் ஜீவன் புதிய உடலை எடுக்கும் போதும் பழைய உடலை விடும் போதும் புலன்களையும் மனத்தையும் பற்றிக்கொண்டு போகிறான்.

ஷ்ரோத்ரம் சக்ஷு: ஸ்பர்ஷநம் ச ரஸநம் க்ராணமேவ ச।
அதிஷ்டாய மநஷ்சாயம் விஷயாநுபஸேவதே॥ 15.9 ॥

காது, கண், உடம்பு, நாக்கு, மூக்கு, மனம் இவற்றை பற்றிக்கொண்டு ஜீவன் விஷயங்களை அனுபவிக்கிறான்.

உத்க்ராமந்தம் ஸ்திதம் வா அபி பும்ஜாநம் வா குணாந்விதம்।
விமூடா நாநுபஷ்யந்தி பஷ்யந்தி ஜ்ஞாநசக்ஷுஷ:॥ 15.10 ॥

உடலை விட்டு செல்லும் போதும், உடலுடன் இருக்கும் போதும், இன்பதுன்பங்களை அனுபவிக்கும் போதும், குணங்களுடன் கூடியவனாக இருக்கும் போதும் எந்த நிலையிலும் ஜீவனை மூடர்கள் காண்பதில்லை. புத்தி விழித்தெழ பெற்றவர்கள் காண்கிறார்கள்.

யதந்தோ யோகிநஷ்சைநம் பஷ்யந்த்யாத்மந்யவஸ்திதம்।
யதந்தோ அப்யக்ருதாத்மாநோ நைநம் பஷ்யம்த்யசேதஸ:॥ 15.11 ॥

முயற்சி செய்கின்ற யோகிகள் இந்த ஜீவனை தங்களுள் இருப்பதாக காண்கிறார்கள். மனத்தூய்மை பெறாதவர்களும் தன்னறிவற்றவர்களும் முயற்சி செய்தாலும் இதனை காண்பதில்லை.

யதாதித்யகதம் தேஜோ ஜகத்பாஸயதே அகிலம்।
யச்சந்த்ரமஸி யச்சாக்நௌ தத்தேஜோ வித்தி மாமகம்॥ 15.12 ॥

சூரியனில் உள்ள எந்த ஒளி உலகம் முழுவதையும் பிரகாசிக்கசெய்கிறதோ, எந்த ஒளி சந்திரனிலும் அக்னியிலும் திகழ்கிறதோ, அந்த ஒளி என்னுடையது என்று அறிவாய்.

காமாவிஷ்ய ச பூதாநி தாரயாம்யஹமோஜஸா।
புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக:॥ 15.13 ॥

நான் என் சக்தியால் பூமியில் புகுந்து உயிர்களை தாங்குகிறேன். உயிர் சக்தி வடிவாகிய சந்திரனாக ஆகி மூலிகைகளை எல்லாம் வளர்கிறேன்.

நான் உயிர்களின் உடம்பில் வைசுவாணர அக்னியாக இருந்துகொண்டு பிராணன் மற்றும் அபானனுடன் கூடி நான்கு விதமான உணவை ஜீரணம் செய்கிறேன்.
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம்ச।
வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ வேதாந்தக்ருத்வேதவிதேவ சாஹம்॥ 15.15 ॥

நான் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறேன். ஆன்ம நினைவு, விழிப்புணர்வு, சந்தேகமற்ற நிலை எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. அனைத்து வேதங்களாலும் அறியப்படும் பொருள் நானே. வேதாந்தத்தை தோற்றுவித்தவனும் வேதத்தை அறிந்தவனும் நானே.

த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஷ்சாக்ஷர ஏவ ச।
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோ அக்ஷர உச்யதே॥ 15.16 ॥

நிலையற்றது என்றும் நிலையானது என்றும் உலகில் இரண்டு பிரிவுகள் உள்ளன. தோன்றிய அனைத்தும் நிலையற்றவை என்ற பிரிவில் வருகின்றன. தோன்றிய அனைத்தின் உள்ளே இருப்பவன் நிலையானவன்.

உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத:।
யோ லோகத்ரயமாவிஷ்ய பிபர்த்யவ்யய ஈஷ்வர:॥ 15.17 ॥

யார் மூன்று உலகங்களை வியாப்பித்து அவற்றை தாங்குகிறாரோ அவர் அழிவற்றவரும் தலைவரும் பரமாத்மா என்றும் சொல்லபடுபவருமான மேலான புருஷர் ஆவார். நிலையற்றவை, நிலையானவன் இருவரிலிருந்தும் வேறானவர் இவர்.

யஸ்மாத்க்ஷரமதீதோ அஹமக்ஷராதபி சோத்தம:।
அதோ அஸ்மி லோகே வேதேச ப்ரதித: புருஷோத்தம:॥ 15.18 ॥

நான் எந்த காரணத்தால் நிலையற்றதை கடந்தவனோ, நிலையானதற்கும் மேலானவனோ அந்த காரணத்தால் உலகத்திலும் வேதங்களிலும் புருஷோத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன்.

யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதிபுருஷோத்தமம்।
ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேந பாரத॥ 15.19 ॥

அர்ஜுனா ! யார் இவ்வாறு மனமயக்கம் இல்லாதவனாக புருஷோத்தமன் என்று என்னை அறிகிறானோ அவன் எல்லாம் அறிந்தவனாக என்னை முழுமனத்துடன் வழிபடுகிறான்.

இதி குஹ்யதமம் ஷாஸ்த்ரமிதமுக்தம் மயா அநக।
ஏதத்புத்த்வா புத்திமாந்ஸ்யாத்க்ருதக்ருத்யஷ்ச பாரத॥ 15.20 ॥

பாவம் இல்லாதவனே ! அர்ஜுனா ! மிகவும் ஆழ்ந்ததான இந்த சாஸ்திரம் என்னால் கூறப்பட்டது. இதை அறிந்தவன் அறிவாளியாகவும் செய்ய வேண்டியதை செய்தவனாகவும் ஆவான்.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுந ஸம்வாதே
புருஷோத்தமயோகோ நாம பம்சதஷோ அத்யாய:॥ 15 ॥

ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'புருஷோத்தம யோகம்' எனப் பெயர் படைத்த பதினைந்தாவது அத்தியாயம் நிறைவுற்றது.

தொடரும்...