நல்லாட்சியை விமர்சிக்க 'மொட்டு'க்கு அருகதை இல்லை! - மைத்திரி பதிலடி
#Maithripala Sirisena
#government
Reha
2 years ago
"எனது தலைமையில் நல்லாட்சி திறம்பட நடைபெற்றது. இதை விமர்சிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினருக்கு எந்த அருகதையும் கிடையாது." - இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தேசிய அரசமைக்கும் யோசனைக்கு எதிராகவும் அவர் கருத்து வெளியிட்டார்.
”அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அரச செலவீனங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையில், தேசிய அரசமைக்கும் யோசனை ஏற்புடையது அல்ல. இன்று அமைச்சுகளுக்குள் மோதல் இடம்பெறுகின்றது.
எமக்கு தேசிய வேலைத்திட்டமொன்றே அவசியம். அதனை முன்வைப்போம்.நல்லாட்சி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அடியோடு நிராகரிக்கின்றோம்" - என்றார்.