நாளை நள்ளிரவு முதல் கட்டணம் அதிகரிப்பு: கட்டண திருத்தங்கள் நாளை அமைச்சரவையில் !
Prathees
2 years ago
நாளை (14) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிராண்டா தெரிவித்தார்.
பஸ் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்டண திருத்தங்கள் அமைச்சரவையில் நாளை (14) சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.