நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீயில் கடல்வாழ் உயிரினங்கள் எதுவும் இறக்கவில்லை!
கொழும்பு கடற்பகுதியில் 'நியூ டயமண்ட்' என்ற கப்பல் தீப்பிடித்ததில் கடல்வாழ் உயிரினங்கள் எதுவும் உயிரிழக்கவில்லை என்றும் பவளப்பாறை அல்லது சதுப்புநில அமைப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
கோப் குழுவில் இடம்பெற்ற கேள்வி பதில் அமர்வின் போதே அதன் தலைவி தர்ஷனி லஹதபுர இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பலினால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் இலங்கைக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு குறைப்பு தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஆவு நேற னுயைஅழனெ என்ற மசகு எண்ணெய் கப்பலில் நேற்று (3.9.2020) காலை 8.30 அளவில் தீ பரவியது. கப்பலில் இயந்திரப் பகுதியிலுள்ள இயந்திரமொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவமே இந்த தீக்கான காரணம் என முதற்கட்ட விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த கப்பலில் 2 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் மசகு எண்ணெய் மற்றும் கப்பலின் பயன்பாட்டிற்காக சுமார் 1700 மெட்ரிக் டன் டீசல் ஆகியன இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.