22 வருடங்கள், 102 நாடுகளை சுற்றி வீடு திரும்பிய குடும்பம்
அர்ஜென்டினாவை சேர்ந்த ஜாப் என்பவரின் குடும்பம் 22 வருடம் உலகம் முழுவதும் சுற்றி, அவர்களது பயணத்தை முடித்து விட்டு வீடு திரும்பி உள்ளனர். ஹெர்மன் மற்றும் கேண்டலேரியா அவர்களது குழந்தைகள் 2,000 ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் பயணம் செய்து வந்தனர்.
அந்த குடும்பத்தினர் மொத்தம் 22 வருடங்கள், 102 நாடுகள் மற்றும் எண்ணற்ற நினைவுகளுக்குப் பிறகு தங்கள் வாழ்நாள் பயணத்தை முடித்து உள்ளனர்.
இந்த பயணம் தொடங்கியபோது ஹெர்மனுக்கு வயது 31, இப்போது அவருக்கு வயது 53. அவரது மனைவியான கேண்டலேரியாவுக்கு வயது 29, இப்போது வயது 51. இந்த பயணத்தில் போது அவர்களது குழந்தைகள் நான்கு பேரும் நான்கு வெவ்வேறு நாடுகளில் பிற்ந்துள்ளனர்.
அமெரிக்காவில் பிறந்த பாம்பாவிற்கு தற்போது 19 வயது ஆகிறது. அர்ஜென்டினாவில் பிறந்த டெஹுவாவிற்கு 16 வயது , கனடாவில் பிறந்த பலோமாவிற்கு 14 வயது மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த வாலாபிக்கு 12 வயது .ஹெர்மன் மற்றும் கேண்டலேரியா உலகப் பயணத்தின் போது 3,62,000 கிலோமீட்டர்கள் (225,000 மைல்கள்) பயணம் செய்துள்ளனர். அவர்கள் தங்களது நான்கு குழந்தைகளை பயணத்திலேயே வளர்த்துள்ளனர்.