மோட்ச சன்யாஸ யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் -65.
பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அதாஷ்டாதஷோ அத்யாய:।
மோட்ச சன்யாஸ யோகம்
(கடமை மூலம் கடவுள்)
அர்ஜுன உவாச।
ஸம்ந்யாஸஸ்ய மஹாபாஹோ தத்த்வமிச்சாமி வேதிதும்।
த்யாகஸ்ய ச ஹ்ருஷீகேஷ ப்ருதக்கேஷிநிஷூதந॥ 18.1 ॥
அர்ஜுனன் கூறினான்: தோள்வலிமை மிக்கவனே ! கிருஷ்ணா ! கேசி என்ற அசுரனை கொன்றவனே ! சன்னியாசம், தியாகம் இரண்டின் உட்பொருளையும் தனித்தனியாக அறிய விரும்புகிறேன்.
ஸ்ரீபகவாநுவாச।
காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸம்ந்யாஸம் கவயோ விது:।
ஸர்வகர்மபலத்யாகம் ப்ராஹுஸ்த்யாகம் விசக்ஷணா:॥ 18.2 ॥
ஸ்ரீ பகவான் கூறினார்: ஆசை வசப்பட்டு செய்கின்ற செயல்களை விடுவது சன்னியாசம் என்று மகான்கள் அறிகிறார்கள். செயல்களின் பலனை விட்டுவிடுவது தியாகம் என்று தீர்க்கதரிசிகள் சொல்கிறார்கள்.
த்யாஜ்யம் தோஷவதித்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண:।
யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே॥ 18.3 ॥
எல்லா செயல்களும் குற்றம் உடையவை. எனவே எல்லாம் துறக்கபட வேண்டியவை என்று ஒருசிலர் கூறுகின்றனர். வழிபாடு, தானம், தவம் போன்றவற்றவை துறக்ககூடாது என்று வேறு சிலர் கூறுகின்றனர்.
நிஷ்சயம் ஷ்ருணு மே தத்ர த்யாகே பரதஸத்தம।
த்யாகோ ஹி புருஷவ்யாக்ர த்ரிவித: ஸம்ப்ரகீர்தித:॥ 18.4 ॥
பரதகுலத்தில் சிறந்தவனே ! தியாக விஷயத்தில் எனது உறுதியான கருத்தை கேள். ஆண்களில் புலி போன்றவனே ! தியாகம் மூன்று விதம் என்று கூறப்பட்டுள்ளது.
யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத்।
யஜ்ஞோ தாநம் தபஷ்சைவ பாவநாநி மநீஷிணாம்॥ 18.5 ॥
வழிபாடு, தானம், தவம் ஆகிய செயல்கள் விடுவதற்கு உரியவை அல்ல. இவற்றை கட்டாயம் செய்ய வேண்டும். இவை சான்றோர்களை( அதாவது உரிய விதத்தில் செய்பவர்களை ) புனிதபடுத்துபவை.
ஏதாந்யபி து கர்மாணி ஸங்கம் த்யக்த்வா பலாநி ச।
கர்தவ்யாநீதி மே பார்த நிஷ்சிதம் மதமுத்தமம்॥ 18.6 ॥
அர்ஜுனா ! இந்த செயல்களையும் கூட பற்றை விட்டும் பலனை எதிர்பாராமலும் செய்ய வேண்டும் என்பது எனது உறுதியானதும் மேலானதுமான கருத்தாகும்.
நியதஸ்ய து ஸம்ந்யாஸ: கர்மணோ நோபபத்யதே।
மோஹாத்தஸ்ய பரித்யாகஸ்தாமஸ: பரிகீர்தித:॥ 18.7 ॥
விதித்த கடமையை விடுவது சரியல்ல. மனத்தெளிவின்மை காரணமாக அவ்வாறு விடுவது தாமச தியாகம்.
து:கமித்யேவ யத்கர்ம காயக்லேஷபயாத்த்யஜேத்।
ஸ க்ருத்வா ராஜஸம் த்யாகம் நைவ த்யாகபலம் லபேத்॥ 18.8 ॥
துன்பமாக இருக்கிறது என்ற காரணத்தாலும், உடம்பிற்கு தொந்தரவு என்ற பயத்தாலும் செயல்களை விடுவது ராஜச தியாகம். இந்த தியாகத்தினால் தியாகத்திற்கு உரிய பலன் கிடைப்பதில்லை.
கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதே அர்ஜுன।
ஸங்கம் த்யக்த்வா பலம் சைவ ஸ த்யாக: ஸாத்த்விகோ மத:॥ 18.9 ॥
அர்ஜுனா ! சாதாரண செயல்களையே, அவை செய்யப்பட வேண்டியவை என்பதற்காக, பற்றையும் பலனையும் விட்டு செய்தால் அது சாத்வீக தியாகம்.
ந த்வேஷ்ட்யகுஷலம் கர்ம குஷலே நாநுஷஜ்ஜதே।
த்யாகீ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதாவீ சிந்நஸம்ஷய:॥ 18.10 ॥
சத்வம் நிறைந்த, உண்மையறிவுடைய, சந்தேகம் நீங்கபெற்ற, தியாக சிந்தனை உடைய ஒருவன், துன்பம் தருவது என்பதற்காக ஒரு செயலை வெறுப்பதில்லை. இன்பம் தருவது என்பதற்காக ஒரு செயலை விரும்புவதும் இல்லை.
ந ஹி தேஹப்ருதா ஷக்யம் த்யக்தும் கர்மாண்யஷேஷத:।
யஸ்து கர்மபலத்யாகீ ஸ த்யாகீத்யபிதீயதே॥ 18.11 ॥
சாதாரண மனிதனால் செயல்களை அறவே விடுவது இயலாது. யார் வினைபயனை விட்டவனோ அவனே தியாகி.
அநிஷ்டமிஷ்டம் மிஷ்ரம் ச த்ரிவிதம் கர்மண: பலம்।
பவத்யத்யாகிநாம் ப்ரேத்ய ந து ஸம்ந்யாஸிநாம் க்வசித்॥ 18.12 ॥
பற்றுடன் வேலை செய்பவர்கள் மரணத்திற்கு பிறகு இன்பமானது, துன்பமானது, இரண்டும் கலந்தது என்று மூன்று விதமான வினைபயன்களை அனுபவிக்கிறார்கள். ஆனால் பற்றை விட்டவர்களுக்கு ஒருபோதும் இந்த அனுபவங்கள் இல்லை.
பம்சைதாநி மஹாபாஹோ காரணாநி நிபோத மே।
ஸாங்க்யே க்ருதாந்தே ப்ரோக்தாநி ஸித்தயே ஸர்வகர்மணாம்॥ 18.13 ॥
பெரும்தோள் உடையவனே ! கர்மம் இது என்று கூறுகின்ற சாங்கிய தத்துவத்தில் எல்லா கர்மங்களின் நிறைவிற்க்காக கூறப்பட்டுள்ள இந்த ஐந்து காரணங்களை என்னிடமிருந்து அறிந்து கொள்.
அதிஷ்டாநம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம்।
விவிதாஷ்ச ப்ருதக்சேஷ்டா தைவம் சைவாத்ர பம்சமம்॥ 18.14 ॥
உடம்பு, தன்முனைப்பு, பல்வேறு உறுப்புகள், பலவிதமான செயல்பாடுகள் இவற்றுடன் ஐந்தாவதாக தேவ சக்திகள் ஆகியவையே ஒரு கர்மத்திர்க்கு நிபந்தனைகள் ஆகின்றன.
ஷரீரவாங்மநோபிர்யத்கர்ம ப்ராரபதே நர:।
ந்யாய்யம் வா விபரீதம் வா பம்சைதே தஸ்ய ஹேதவ:॥ 18.15 ॥
நியாயமானதோ, அநியாயமானதோ எந்த கர்மத்தையானாலும் சரி, உடலால், வாக்கால், மனத்தால் மனிதன் தொடங்கினால் அதற்கு இந்த ஐந்தும் காரணமாக அமைகின்றன.
தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய:।
பஷ்யத்யக்ருதபுத்தித்வாந்ந ஸ பஷ்யதி துர்மதி:॥ 18.16 ॥
அது அப்படி இருக்க, தெளிவற்ற புத்தியின் காரணமாக யார் இறைவனை கர்த்தாவாக காண்கிறானோ அந்த மூடன் உண்மையை காண்பதில்லை.
யஸ்ய நாஹம்க்ருதோ பாவோ புத்திர்யஸ்ய ந லிப்யதே।
ஹத்வா அபி ஸ இமாம்ல்லோகாந்ந ஹந்தி ந நிபத்யதே॥ 18.17 ॥
நான் செய்கிறேன் என்ற எண்ணம் யாருக்கு இல்லையோ, யாருடைய மனம் பற்றற்றதோ அவன் இந்த உலக உயிர்கள் அனைத்தையும் கொன்றாலும் கொன்றவன் ஆகமாட்டான். அந்த செயலால் வரும் பந்தமும் அவனுக்கு இல்லை.
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா கர்மசோதநா।
கரணம் கர்ம கர்தேதி த்ரிவித: கர்மஸம்க்ரஹ:॥ 18.18 ॥
அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன் என்று கர்ம தூண்டுதல் மூன்று விதம். கருவி, செயல், செய்பவன் என்று செயலின் ஆதாரம் மூன்று விதம்.
ஜ்ஞாநம் கர்ம ச கர்தாச த்ரிதைவ குணபேதத:।
ப்ரோச்யதே குணஸங்க்யாநே யதாவச்ச்ருணு தாந்யபி॥ 18.19 ॥
அறிவும் செயலும் செய்பவனும் குண வேறுப்பாட்டால் மூவகை என்று குணங்களை பற்றி கூறுவதான சாங்கிய சாஸ்திரத்தில் சொல்லபட்டுருக்கிறது. அவற்றையும் உள்ளபடி கேள்.
ஸர்வபூதேஷு யேநைகம் பாவமவ்யயமீக்ஷதே।
அவிபக்தம் விபக்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ஸாத்த்விகம்॥ 18.20 ॥
வெவேறான உயிரினங்களில் வேறுபாடற்ற அழியாத ஒரே உணர்வை காண்கின்ற அறிவு சாத்வீக அறிவு.
ப்ருதக்த்வேந து யஜ்ஜ்ஞாநம் நாநாபாவாந்ப்ருதக்விதாந்।
வேத்தி ஸர்வேஷு பூதேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ராஜஸம்॥ 18.21 ॥
வெவ்வேறு உயிரினங்களை ஒன்றிலிருந்து ஒன்று வேறானதாக அறிகின்ற அறிவு ராஜச அறிவு.
யத்து க்ருத்ஸ்நவதேகஸ்மிந்கார்யே ஸக்தமஹைதுகம்।
அதத்த்வார்தவதல்பம் ச தத்தாமஸமுதாஹ்ருதம்॥ 18.22 ॥
ஒரு பகுதியையே எல்லாம் என்று விடாபிடியாக பற்றி கொண்டு இருக்கின்ற, யுக்திக்கு பொருந்தாத, உண்மைக்கு பொருந்தாத, அற்பமான அறிவு தாமச அறிவு.
நியதம் ஸங்கரஹிதமராகத்வேஷத: க்ருதம்।
அபலப்ரேப்ஸுநா கர்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே॥ 18.23 ॥
பலனில் ஆசை வைக்காமல், பற்றின்றி, விருப்பு வெறுப்பு இன்றி, தனக்கென்று விதிக்கப்பட்டுள்ள கடமையை செய்வது சாத்வீக செயல்.
யத்து காமேப்ஸுநா கர்ம ஸாஹம்காரேண வா புந:।
க்ரியதே பஹுலாயாஸம் தத்ராஜஸமுதாஹ்ருதம்॥ 18.24 ॥
ஆசை வசப்பட்டு, தன்முனைப்புடன் மிகவும் பாடுபட்டு செய்ய செய்யபடுவது ராஜச செயல்.
அநுபந்தம் க்ஷயம் ஹிம்ஸாமநபேக்ஷ்ய ச பௌருஷம்।
மோஹாதாரப்யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே॥ 18.25 ॥
செயலின் விளைவையும் நஷ்டத்தையும் துன்பத்தையும் சொந்த ஆற்றலையும் எண்ணி பாராமல் மனமயக்கத்தால் தொடங்கபடுவது தாமச செயல்.
முக்தஸங்கோ அநஹம்வாதீ த்ருத்யுத்ஸாஹஸமந்வித:।
ஸித்த்யஸித்த்யோர்நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே॥ 18.26 ॥
பற்றற்றவன், அகங்காரம் இல்லாதவன், உறுதியும் ஊக்கமும் உடையவன், வெற்றி தோல்வியில் மாறுபடாதவன் சாத்வீக கர்த்தா.
புத்தேர்பேதம் த்ருதேஷ்சைவ குணதஸ்த்ரிவிதம் ஷ்ருணு।
ப்ரோச்யமாநமஷேஷேண ப்ருதக்த்வேந தநம்ஜய॥ 18.29 ॥
புத்தி மற்றும் மன உறுதியின் தன்மைகளுக்கு ஏற்ப மூன்று விதமான வேறுபட்ட கண்ணோட்டங்களை தனித்தனியாக முற்றிலும் சொல்கிறேன் கேள்.
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே।
பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்தி: ஸா பார்த ஸாத்த்விகீ॥ 18.30 ॥
அர்ஜுனா ! உலகியல் வாழ்க்கை – முக்திபாதை, செய்ய தகாதது – செய்ய தக்கது, பயம் – பயமின்மை, பந்தம் – மோட்சம் ஆகியவற்றிக்கு இடையே உள்ள வேறுபாட்டை அறிவது சாத்வீக புத்தி.
யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச।
அயதாவத்ப்ரஜாநாதி புத்தி: ஸா பார்த ராஜஸீ॥ 18.31 ॥
அர்ஜுனா ! தர்மத்தையும் அதர்மத்தையும் செய்ய தக்கதையும் செய்ய தகாததையும் தாறுமாறாக அறிவது ராஜச புத்தி.
அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா।
ஸர்வார்தாந்விபரீதாம்ஷ்ச புத்தி: ஸா பார்த தாமஸீ॥ 18.32 ॥
அர்ஜுனா ! அறியாமை இருளால் மூடபெற்று அதர்மத்தை தர்மம் என்றும் எல்லாவற்றையும் விபரிதமாகவும் அறிவது தமாச புத்தி.
த்ருத்யா யயா தாரயதே மந:ப்ராணேந்த்ரியக்ரியா:।
யோகேநாவ்யபிசாரிண்யா த்ருதி: ஸா பார்த ஸாத்த்விகீ॥ 18.33 ॥
அர்ஜுனா ! யோக வாழ்கையின் விளைவாக வருவது சாத்வீக உறுதி. பிறழாத அந்த உறுதியால் மனம், பிராணம் மற்றும் புலன்களின் செயல்பாடுகளை ஒருவன் நெறிபடுத்துகிறான்.
யயா து தர்மகாமார்தாந்த்ருத்யா தாரயதே அர்ஜுன।
ப்ரஸங்கேந பலாகாங்க்ஷீ த்ருதி: ஸா பார்த ராஜஸீ॥ 18.34 ॥
குந்தியின் மகனே அர்ஜுனா ! எந்த உறுதியால் ஒருவன் அறம், இன்பம், பொருள் இவற்றை காக்கிறானோ, மிகுந்த பற்றுதலின் காரணமாக பலனை நாடுகிறானோ அது ராஜச உறுதி.
யயா ஸ்வப்நம் பயம் ஷோகம் விஷாதம் மதமேவ ச।
ந விமும்சதி துர்மேதா த்ருதி: ஸா பார்த தாமஸீ॥ 18.35 ॥
அர்ஜுனா ! மூடன் கொல்வது தாமச உறுதி . அந்த உறுதியால் தூக்கம், பயம், கவலை, மனக்கலக்கம், கர்வம் இவற்றை அவன் விடாபிடியாக பற்றிக்கொண்டு வாழ்கிறான்.
ஸுகம் த்விதாநீம் த்ரிவிதம் ஷ்ருணு மே பரதர்ஷப।
அப்யாஸாத்ரமதே யத்ர து:காந்தம் ச நிகச்சதி॥ 18.36 ॥
யத்ததக்ரே விஷமிவ பரிணாமே அம்ருதோபமம்।
தத்ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபுத்திப்ரஸாதஜம்॥ 18.37 ॥
அர்ஜுனா ! மூவகை இன்பங்களை கேள். சாத்வீக இன்பம் ஆன்மாவில் நிலைபெற்ற புத்தியின் தெளிவினால் கிடைப்பது. ஆரம்பத்தில் விஷம் போலவும் முடிவில் அமுதம் போன்றும் இருப்பது. தொடர்ந்த பயிற்சியால் அது துக்கம் என்பதே இல்லாமல் செய்கிறது.
விஷயேந்த்ரியஸம்யோகாத்யத்ததக்ரே அம்ருதோபமம்।
பரிணாமே விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம்॥ 18.38 ॥
பொருட்களும் புலன்களும் தொடர்புகொள்வதன் காரணமாக வருவதும், ஆரம்பத்தில் அமுதம் போன்றும் முடிவில் விஷம் போன்றும் இருப்பதும் ராஜச இன்பம்.
யதக்ரே சாநுபந்தே ச ஸுகம் மோஹநமாத்மந:।
நித்ராலஸ்யப்ரமாதோத்தம் தத்தாமஸமுதாஹ்ருதம்॥ 18.39 ॥
தாமச இன்பம் ஆரம்பத்திலும் முடிவிலும் மனமயக்கம் தருகிறது. துக்கம், சோம்பல், தடுமாற்றம் ஆகியவற்றிலிருந்து தோன்றுகிறது.
ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வா திவி தேவேஷு வா புந:।
ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதேபி: ஸ்யாத்த்ரிபிர்குணை:॥ 18.40 ॥
இயற்கையிலிருந்து தோன்றிய இந்த மூன்று குணங்களிலிருந்து விடுபட்ட உயிரினங்கள் பூமியிலோ, சொர்க்கதிலோ, தேவலோகத்திலோ இல்லை.
ப்ராஹ்மணக்ஷத்ரியவிஷாம் ஷூத்ராணாம் ச பரம்தப।
கர்மாணி ப்ரவிபக்தாநி ஸ்வபாவப்ரபவைர்குணை:॥ 18.41 ॥
எதிரிகளை எரிப்பவனே ! மன இயல்பிலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்ப பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களின் வேலைகள் பிரிக்கபட்டிருக்கின்றன.
தொடரும்....