ஜனாதிபதிக்கும் முன்னாள் பிரதமருக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு

Prabha Praneetha
2 years ago
ஜனாதிபதிக்கும் முன்னாள் பிரதமருக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதனை அடுத்து ஜனாதிபதிக்கும் முன்னாள் பிரதமருக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான விடயங்கள், இலங்கையின் தற்போதைய நிதி நிலை மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு பலதடவைகள் கோட்டபாய ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் 20 ஆவது திருத்தத்தின் கீழ் கொள்கை ரீதியிலான தீர்மானத்தை எடுப்பதில் பிரதமரின் பங்கு மிகவும் குறைவான செல்வாக்கு காணப்படுவதை சுட்டிக்காட்டி குறித்த கோரிக்கை நிகரிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது

18 ஆவது திருத்த சட்டத்தில் ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டமை காரணமாக 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.