தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 82

#history #Article #Tamil People
தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 82

சோழர் வரலாறு - பராந்தகன் மரபினர்

 பராந்தகன் மரபினர்
(கி.பி. 953-985)

பராந்தகன் மரபினர் : திருவாலங்காட்டுச் செப்பேடு லீடன் பட்டயம் முதலியவற்றை ஆராய்கையில், பராந்தகனுக்குப் பிறகும் அவன் காலத்தும் அரசுரிமை தாங்கியவர் இவர் என்பது தெரிகிறது.

கண்டராதித்தன் (கி.பி. 949-957): இவனுக்கு முற்பட்ட வனான இராசாதித்தன் விட்டமையால், பராந்தகர்க்குப் பிறகு கண்டராதித்தனே பட்டம் பெற்றான். இவன் தந்தை இருந்தபொழுதே தன் பெயரால் கல்வெட்டுகளை
முதற் பராந்தகன் 

   
கோக்கிழான் அடிகள்
மகன்


இராசாதித்தன்    கண்டராதித்தன்    சேரன் மகள்


மகன்
அரிஞ்சயன்


உத்தம சோழன்
(மதுராந்தகன்)    (வைதும்பர் மகளான

கலியாணியை
மணந்தவன்)


இரண்டாம் பராந்தகன்
(சுந்தர சோழன்)


இரண்டாம் ஆதித்தன்
(பார்த்திவேந்திர கரிகாலன்)    

முதலாம் இராசராசன்
(கி.பி. 985)

வெளியிட்டவன்.

இவன் இராசகேசரி யாவன். இவன் மழவரையன் மகளார் செம்பியன் மாதேவியார் என்பாரை மணந்து, உத்தமசோழன் (மதுராந்தகன்) என்பவனைப்பெற்றான். இவன் காவிரியின் வடகரையில் 'கண்டராதித்த சதுர்வேதி மங்கலம்’ எனத் தன்பெயரால் ஊர் உண்டாக்கி இறந்தனன். இவன் படிமத்தைக் கோனேரிராசபுரத்துக் கோவிலுட் காணலாம். இவனுக்கு வீர நாராயணி என்றொரு மனைவியும் இருந்தனள். இச்சோழ மன்னன் இராட்டிரகூட மன்னன் வென்ற தொண்டை நாட்டைக் கைப்பற்ற முனைந்தான், ஒரளவு வெற்றியும் பெற்றான் என்று நினைக்க இடமுண்டு.