காலி முகத்திடலில் நிகழும் கோட்டா கோகமவிற்கு சூரிய சக்தி மின்சாரம்
#SriLanka
#Power
Mugunthan Mugunthan
3 years ago

காலி முகத்திடலில் 24 மணித்தியாலங்கள் இயங்கும் சூரிய மின்சக்தி நிலையம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
லாரியில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் நிலையத்தின் திறன் 6 கிலோவாட் என காட்டப்பட்டுள்ளது.
குறித்த நடமாடும் சூரிய சக்தி நிலைய வாகனம் பல நாட்களாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் போர்க்களத்தில் கூடாரங்களில் வாழும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படும் எனவும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.



