ஜனாதிபதியின் இல்லத்தில் நடந்த முக்கிய சந்திப்பு!
Mayoorikka
3 years ago

இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று, ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நிமல் ஸ்ரீ பாலடீ சில்வா, அநுர பிரியதர்சன யாப்பா, விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, டிரான் அலஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஜீ.எல்.பீரிஸ், சாகர காரியவசம், சஞ்சீவ எதிரிமான்ன, பசில் ராஜபக்ஸ மற்றும் ரமேஸ் பத்திரண உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்



