கோட்டா கோகம இடத்திற்கு வந்த பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவு - கடும் எதிர்ப்பினால் பின்வாங்கினர்
Mayoorikka
3 years ago

காலிமுகத்திடல் முன்னெடுக்கப்படும் “கோட்டா கோகம” வுக்கு அருகில், கலகம் தடுக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
துறைமுக நகர் நுழைவாயிலுக்கு முன்பாகவே, கலகம் தடுக்கும் பொலிஸார் இவ்வாறு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் மேடையொன்றை நிர்மாணிப்பதை தடுக்கும் வகையிலேயே இன்று பிற்பகல் கலகத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் அங்கு சென்றிருந்தனர்.
எனினும், போராட்டக்காரர்களின் எதிர்ப்பை ஏற்று அதிரடிப்படையினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



