சாப்பிட எதுவும் இல்லை: 60 வயதுடைய தந்தை தூக்கிட்டு தற்கொலை

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் 60 வயதுடைய தந்தை கழுத்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் கல்கமுவ - வலஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிறிய குடிசையில் மனைவியுடன் வசித்து வந்த அவர், சேனை விவசாயியாகவும், கூலித் தொழிலாளியாகவும் வாழ்ந்து வந்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், சரியான உணவு கூட கிடைக்காமல், நீண்ட நாட்களாக கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சமீபத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்ற குறித்த நபர், கடந்த 29ம் திகதி காலை வரை வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து, தாத்தா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாக பேத்தி கண்டு உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
பொருளாதார அழுத்தத்தை தாங்க முடியாமல் 60 வயதுடைய தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கல்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கல்கமுவ, வலஸ்வெவ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான டபிள்யூ.எம். ரன்பண்டா என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு சேனை நிலத்தில் விவசாயம் செய்து வருவதும், எண்ணெய் உரம் இடப்படாததால் சாகுபடியும் தரிசாக இருப்பதும் அவதானிப்புகளில் தெரியவந்துள்ளது.
உணவு வழங்குவதற்கு கூட பொருளாதாரம் இல்லாத காரணத்தினால் சில தினங்களுக்கு முன்னர் தம்பதியினரிடையே சிறு தகராறு ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது..



