பணிப்புறக்கணிப்பை கைவிட்ட தனியார் தாங்கி ஊர்தி சாரதிகள்!
Nila
3 years ago

தனியார் பவுசர் சாரதிகள் தாங்கள் முன்னெடுத்து பணிப்புறக்கணிப்பை தற்பொழுது கைவிட்டுள்ளனர்.
கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்துடனான சந்திப்பின் பின்னர் இந்த இணக்கபாட்டுக்கு வந்துள்ளதாக தனியார் பவுசர் சாரதி சங்கத்தின் தலைவர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து போக்குவரத்து கட்டணங்களை அதிகரிக்குமாறு தனியார் பவுசர் சாரதிகள் முன்னெடுத்து இருந்தனர்.
இதேவேளை, தனியார் பவுசர் சாரதிகளின் போக்குவரத்து கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.



