உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்தது !
Nila
2 years ago

அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று முதல் சிறிய உணவுகள், கொத்து மற்றும் மதிய உணவுப் பொட்டலங்கள் விலைகள் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.
நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் கூறியுள்ளது.
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட சில மணி நேரங்களின் பின்னர் மீண்டும் இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



