இலங்கை பெண்ணை திருமணம் செய்து கொள்ள வந்த இந்திய தமிழ்ப் பெண் கைது !

இரண்டு வருடங்களுக்கு மேலாக சமூக வலைத்தளங்களில் உறவைப் பேணி வந்த இந்தியப் பெண்ணும் இலங்கைப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைப் பெண்ணை தமிழகத்திற்கு வருமாறு இந்தியப் பெண் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறித்த பெண்ணால் கடவுச்சீட்டை உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து இந்தியப் பெண் ஜூன் 20 ஆம் திகதி திகதி சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து குறித்த பெண்ணின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
குறித்த இலங்கை பெண்ணுக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இருவருக்கும் இடையிலான உறவுக்கு அவரது தந்தை எதிர்ப்பு தெரிவித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து இரு பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதவான் இரண்டு பெண்களையும் மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை இவர்களுக்கு ஆதரவாக இலங்கையின் எல்ஜிபிடி ஆர்வலர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.



