உயருகிறது முச்சக்கர வண்டி கட்டணங்கள்
Kanimoli
2 years ago

முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களையும் இன்று முதல் அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் 10 ரூபாவினால் அதிகரிக்கும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை 2 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து எரிபொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
இன்றைய எரிபொருள் விலை அதிகரிப்பை கருத்திற் கொண்டு பேருந்து கட்டணத்தை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



