காலி வைத்தியசாலையில் சுகாதார சேவைகளும் மூடப்படவுள்ளன

Kanimoli
2 years ago
காலி வைத்தியசாலையில் சுகாதார சேவைகளும் மூடப்படவுள்ளன

காலியில் உள்ள வைத்தியர்கள் உட்பட பெருமளவிலான சுகாதார ஊழியர்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

இதன் காரணமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை உட்பட காலி மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும், சுகாதார நிறுவனங்களும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (28-06-2022) முதல் மூடப்படுவதுடன், ஏனைய அனைத்து சுகாதார சேவைகளும் மூடப்படவுள்ளன என அதிகாரிகள் சங்கத்தின் காலி கராப்பிட்டிய கிளை தெரிவித்துள்ளது.

காலியில் உள்ள வைத்தியர்கள் உட்பட வைத்திய ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகம் உரிய முறையில் இல்லாத காரணத்தினால் வெள்ளிக்கிழமை 20 வீதமான வைத்தியர்கள் மற்றும் வைத்திய ஊழியர்களுக்கு கூட எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கராப்பிட்டிய கிளை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் எரிபொருளைப் பெற்றுக் கொடுப்பதற்கான முறையான திட்டம் ஒன்றை வகுக்குமாறு தென் மாகாண ஆளுனர் விலிகமகேவிடம் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கராப்பிட்டிய கிளை கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!