மட்டக்களப்பில் நீண்ட நாட்களின் பின் பெட்ரோல் விநியோகம்
Prabha Praneetha
2 years ago
மட்டக்களப்பு - ஆரையம்பதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு கடந்த 15 நாட்களுக்கு பின்னர் நேற்று பெட்ரோல் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரையம்பதி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வந்துள்ள எரிபொருளை பெற்றுகொள்ள நீண்ட வரிசையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளின் உரிமையாளர்கள் காத்து நின்றுள்ளனர்.
பெட்ரோல் நேற்று காலை கொண்டுவரப்பட்டதையடுத்து ஒரு பகுதியில் அரசாங்க ஊழியர்களுக்கும், இன்னொரு பகுதியில் பொது மக்களுக்கும் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் பெட்ரோலை பெறுவதற்கு மிக நீண்ட தூரம் வரிசையில் காத்து நின்றுள்ளனர்.