இலங்கையில் விமான எரிபொருள் விநியோகம் மிகவும் குறைந்த மட்டத்தில் இருக்கின்றது - CAASL
இலங்கையில் விமான எரிபொருள் விநியோகம் மிகவும் குறைந்த மட்டத்தில் இருப்பதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAASL) தெரிவித்துள்ளது.
கையிருப்புகளை அவசரமாக நிரப்பாவிட்டால், நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் விமானங்கள் கணிசமான அளவு குறையும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
CAASL இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் (CPC) விமான எரிபொருளைக் கோரியுள்ளது, ஆனால் CPC யிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்தி எதுவும் இல்லை.
வழங்குநர்கள் தரைவழி போக்குவரத்து, மின் நிலையங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருளைக் வழங்க போதியளவு இல்லாமல் சிரமப்படுகிறார்கள்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளை வழங்க முடியாவிட்டால் குறிப்பிடத்தக்க பற்றாக்குறை இருக்கும்.
விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விமான நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
CPC யிடம் ஒரு வாரத்துக்கான இருப்பு மட்டுமே உள்ளது என்றும் மேலும் கொள்முதல் செய்யும் நிலையில் இல்லை என்றும் அவர்களிடம் கூறப்பட்டுள்ளது.