யாழ்-தமிழகம் கப்பல் சேவைக்கு அனுமதி! -டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு
#SriLanka
#Jaffna
#Tamil Nadu
Mugunthan Mugunthan
2 years ago

காங்கேசன்துறை மற்றும் தமிழக துறைமுகங்களுக்கு இடையில் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
விரைவில் காங்கேசன்துறை மற்றும் தமிழக துறைமுகங்களுக்கு இடையில் சரக்கு கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான அனுமதியை அமைச்சு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



