கடுமையான மருந்து தட்டுப்பாடு காரணமாக கிராமிய மருத்துவமனைகள் மூடப்படும் அபாயம்
Kanimoli
2 years ago

சுகாதாரத்துறையில் நிலவும் கடுமையான மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் கிராமிய மருத்துவமனைகள் மூடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அநுராதபுரத்தின் கலாவெவ கிராமிய மருத்துவமனை, கல்நேவ மருத்துவமனை, நேகம மருத்துவமனை என்பன மூடப்பட்டுள்ளது.
இலங்கையின் மிகவும் கஸ்டப்பிரதேசமான மொனராகலையின் சியம்பலாண்டுவை மருத்துவமனையும் தற்போது மருந்து பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் இன்னும் பல்வேறு மருத்துவமனைகள் மருந்து தட்டுப்பாடு காரணமாக மூடப்படும் அபாயம் எதிர்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



