இலங்கையின் தொடரும் அவல நிலை ஆபத்தான பயணங்களில் மக்கள்!
Nila
2 years ago

எரிபொருள் நெருக்கடி காரணமாக, பொதுப் போக்குவரத்துக்கும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் ஆபத்தான பயணங்களில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மாணவர்களும் தொழில்களுக்குச் செல்வோரும் வாகனங்களின் கூரைகளில் ஏறிநின்று பயணிக்கின்றனர்.
இன்னும் சிலர் ட்ரெக்டர்களில் ஏறிநின்றும் பஸ்களின் பின்னாலும் ஏறிநின்று பயணிக்கின்றனர்.
ராஜபக்க்ஷ குடும்ப ஆட்சியால் இலங்கை திருநாடு அதளபாதாளத்துக்கு சென்றுள்ள நிலையில், மக்கள் பெரும் துன்பங்களுக்கு முகம்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



