தப்பியோடிய கோட்டாபய சிங்கப்பூரில் ஆடை கொள்வனவு - வைரலாகும் புகைப்படம்

Kanimoli
2 years ago
தப்பியோடிய கோட்டாபய சிங்கப்பூரில் ஆடை கொள்வனவு - வைரலாகும் புகைப்படம்

சிங்கப்பூர் விமான நிலையத்தில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பாரியார் அயோமா ராஜபக்சவுடன் ஆடை விற்பனை நிலையத்தில் கொள்வனவில் ஈடுபடும் படம் பகிரப்பட்டு வருகிறது.

இதனை விமான பயணி ஒருவர் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச நேற்று மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற நிலையில், இந்த தகவல் வெளிவந்துள்ளது.

எனினும் கோட்டாபய ராஜபக்சவின் இந்த புகைப்படத்தின் உண்மை தன்மை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சிறிலங்காவில் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி நடத்தப்பட்ட போராட்டங்கள் வலுவடைந்ததை அடுத்து அவர் விமானப் படைக்கு சொந்தமான விமானத்தில் மாலை தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கிருந்து அவர் சவுதி அரேபியாவுக்கு சொந்தமான விமானத்தில் சிங்கப்பூர் சென்றார். அத்துடன் அதிபர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பி வைத்ததுடன், அவரது பதவி விலகல் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!