ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்தது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அல்ல!

Prathees
2 years ago
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்தது  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அல்ல!

தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் புகுந்தது காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அல்ல என ஜனதா விமுக்தி பெரமுனவின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக அரசின் கையாட்கள் ஊடுருவியுள்ளனர் என்றார்.

காலி முகத்திடல்  மக்கள் மத்தியில் தான் உரையாற்றும் போது, ​​அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட குழுவொன்று தம்மை தாக்க வந்ததாக அவர் கூறுகிறார்.

போராட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!