ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார் சஜித்
நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவிற்கான தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினை அவர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி பதவிக்கு மும்முனை போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆளுங்கட்சியின் சார்பில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி பதவிக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்வார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகளின் சார்பில் டளஸ் அழகப்பெருமவை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
‘டளஸ் ஜனாதிபதி, சஜித் பிரதமர்’ என்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி பதவிக்கு இரு முனை போட்டியே நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டளஸ் மற்றும் சஜித் தரப்பு ஓரணியில் இணைந்து களமிறங்காவிட்டால், ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க இலகுவில் வெற்றிபெறுவதற்கான சாத்தியமே அதிகளவில் காணப்படுகின்றது.
இந்தநிலையிலேயே ஜனாதிபதி தெரிவிற்கான தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்.