நாட்டை மீட்டெடுப்பதற்கான திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்படும் - விமல் வீரவன்ச

#Wimal Weerawansa #SriLanka #Election
Kobi
2 years ago
நாட்டை மீட்டெடுப்பதற்கான திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்படும் - விமல் வீரவன்ச

நாட்டை தற்போதைய நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கான அவர்களின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக ஒவ்வொருவருடனும் கலந்துரையாடப்படும் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக அறிவித்துக்கொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. அதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அதன்படி ஒவ்வொரு வேட்பாளர்களின் தனிப்பட்ட திட்டத்தை பரிசீலித்து இறுதியாக ஒருவர் அறிவிக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சியின் தலைவர், டலஸுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள நிலையில், பொதுச் செயலாளர் பதில் அதிபருக்கு ஆதரவை அறிவித்தமை தொடர்பாகவும் அவர் அதிருப்தி வெளியிட்டார்.