ஜனாதிபதி பதவிக்கு அநுரகுமார போட்டியிடுவார்-விஜித ஹேரத் தெரிவிப்பு
#SriLanka
#President
#Election
Prasu
2 years ago
புதிய இடைக்கால ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் போட்டியிடுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதையடுத்து ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் நிலவுவதாக இன்றையதினம் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அறிவித்தார்.
இந்நிலையில், புதிய இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுஜன பெரமுன சார்பில் டலஸ் அழகப்பெரும ஆகியோரும் போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.