ஜனாதிபதிப் போட்டிக்கு என்னையும் அழைத்தார்கள் - மைத்திரி
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து மகாசங்கரத்ன, கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
புதிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தமக்கும் ஏற்கனவே பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஆனால் மக்களுக்கு நீதி வழங்கக்கூடிய ஒரு வேட்பாளரை முன்வைப்பது சிறந்தது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி மற்றும் கோட்டாபய ராஜபக்ச வெளியேறுவது குறித்தும் பாராளுமன்றத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த நேரத்தில் நாட்டு மக்களின் கருத்துக்கு செவிசாய்க்க வேண்டும் என கூறிய அவர்,
ராஜினாமா செய்த ஜனாதிபதி பற்றி எதுவும் கூறமாட்டேன் என்றும், மக்களுக்கு தேவையான நேரத்தில் எண்ணெய் மற்றும் உணவு வழங்கக்கூடிய ஒருவர் இருந்தால் அவர்தான் ஜனாதிபதி என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மேலும் தெரிவித்தார்.