அதிகளவிலான டீசலை பதுக்கி வைத்திருந்த சந்தேகநபரொருவர் கைது

Prabha Praneetha
2 years ago
அதிகளவிலான டீசலை பதுக்கி வைத்திருந்த சந்தேகநபரொருவர் கைது

முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் வீட்டில் அதிகளவான டீசல் மற்றும் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட பெருங்குற்றப்பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

முள்ளியவளை 4ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினை சோதனை செய்தபோது 4 பரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 830 லீட்டர் டீசல் மற்றும் 30 லீட்டர் மண்ணெண்ணைய் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரே கைது செய்யப்பட்டு முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 21ஆம் திகதி குறித்த வழக்கை முள்ளியவளை பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!