இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ படைத்த சாதனைகள்!

#Sri Lanka President #Gotabaya Rajapaksa
Nila
2 years ago
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  படைத்த சாதனைகள்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்த போதிலும் இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் பல சாதனைகளை படைத்த ஒருவராக அவர் காணப்படுகின்றார்.

இந்த நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி பதவியை ஏற்றவர் கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமே என்பது முக்கிய அம்சமாகும்.

அத்துடன், இந்த நாட்டின் அரசியலில் முதல் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அவர், இதற்கு முன்னர் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடவில்லை.

மேலும், கோட்டாபய  ராஜபக்ஷ கட்சித் தலைவராக இல்லாத ஒரேயொரு ஜனாதிபதி என்பதுடன் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட அனைத்து ஜனாதிபதிகளும் கட்சித் தலைவர்களாக இருந்ததோடு அவர்கள் இல்லாத சந்தர்ப்பங்களிலும் கூட பின்னர் கட்சித் தலைவர்களாக மாறியுள்ளனர்.

மேலும், இந்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகக் குறுகிய காலத்திற்கு மக்கள் வாக்கு மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி என்பதுடன், தனது பதவியை இராஜினாமா செய்த முதலாவது ஜனாதிபதியும் இவராகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!