பெற்றோல் கப்பல் வரும்: டீசல் குறித்து சோதனை

Mayoorikka
2 years ago
பெற்றோல் கப்பல் வரும்: டீசல் குறித்து சோதனை

43,000 மெற்றிக் தொன் டீசல் ஏற்றிவந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று அதிகாலை வந்தடைந்துள்ளது என, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

டீசலை தரையிறக்கும் பணி முடிந்தவுடன் எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கொண்டுவரப்பட்ட டீசல் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், 40,000 மெற்றிக் தொன் டீசலை சுமந்து வரும் இரண்டாவது கப்பல் இன்றையதினத்துக்குள் கொழும்பை வந்தடையும் என்று அமைச்சர் குறிபிட்டுள்ளார்.

எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிக்கு இடையில் பெற்றோல் கப்பல் நாட்டை வந்தடையும் என்றும் மூன்று கப்பல்களுக்கான பணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!