இலங்கைக்கு விஜயம் செய்ய முன்னர் இருமுறை சிந்தியுங்கள்: தமது பிரஜைகளுக்கு அறிவித்துள்ள நாடுகள்
Prathees
2 years ago
பிரித்தானியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் பிரஜைகள் அத்தியாவசிய காரணங்களுக்காக தவிர இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளனர்.
நாட்டின் பயண ஆலோசனைகளை புதுப்பித்து, இலங்கையில் வன்முறை போராட்டங்கள் காரணமாக பாதுகாப்பு நிலைமை மோசமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் தமது பிரஜைகள் இருமுறை சிந்திக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, வேறு பல வெளிநாடுகளில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளை, இலங்கையை விட்டு விரைவில் வெளியேறுமாறு தாய் நாடுகளினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.