முல்லைத்தீவில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 830 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது!
Reha
2 years ago
முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 830 லீற்றர் டீசலுடன், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டை சோதனைக்கு உட்படுத்தியபோது, 4 பீப்பாய்களில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 830 லீற்றர் டீசல் மற்றும் 30 லீற்றர் மண்ணெண்ணைய் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டு, காவல்துறையால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.