ரணில் மக்களிடம் பாடம் கற்பார்
Kanimoli
2 years ago
ரணில் விக்ரமசிங்க இம்முறை மக்களிடம் பாடம் கற்பார் என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
போராட்டத்தை ஒடுக்க பல்வேறு குழுக்கள் ஊடுருவியுள்ளது உண்மை என தெரிவித்த அவர், போராட்ட களத்தில் பேசும் போது ரணிலின் அடியாட்களால் தானும் இடைமறிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
மஹிந்தவின் பாதுகாப்பிற்காக இன்று யானையின் வாலை பிடித்துள்ளதாகவும், மஹிந்த ரணிலையும் ரணில்-மஹிந்தவையும் பாதுகாக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் சமரசிங்க தெரிவித்தார்.
மக்களைக் கொல்வதற்கும் உடமைகளை அழிப்பதற்கும் தமது கட்சி எதிரானது எனத் தெரிவித்த அவர், இவ்வாறான செயற்பாடுகளை ஜே.வி.பி ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவித்தார்.