போதைப் பொருளுடன் இருவர் கைது

Kanimoli
2 years ago
போதைப் பொருளுடன் இருவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட கள்ளப்பாடு பகுதியில் கடந்த 14.07.2022 அன்று ஐஸ் எனப்படும் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய கள்ளப்பாடு பகுதியில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்போது 23 அகவையுடைய கள்ளப்பாடு வடக்கினை சேர்ந்த ஒருவரும் 20 அகவையுடைய வெள்ளப்பள்ளம் உடையார்கட்டு வடக்கு பகுதியினை சேர்ந்த ஒருவருமே கைது செய்யப்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணையின் பின்னர் இருவரும் 15.07.2022 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் ஒரு கிராமிக்கும் அதிகமான ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கள்ளப்பாடு வடக்கினை சேர்ந்த 23 அகவையுடைய நபரை விளக்கமறியலில் வைக்கமன்று உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!