இன்றைய வேத வசனம் 17.07.2022: சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும்வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 17.07.2022: சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும்வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.

அழகு என்பது தேவனுடைய ஈவு. அது தேவ கிருபையோடு விரும்பப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டியது.

அழகைக் கவனமாகப் பாதுகாக்காவிடில் அது பொல்லாத மனிதர்களால் மீறப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்படும்.

தாமார் தாவீதின் மகள். அவள் ஓர் இளவரசி மிகவு அழகானவள் அவள் கன்னிப்பெண்களான இளவரசிகள் அணியும் அழகான ஆடைகள் அணிந்திருந்தாள். அவள் ராஜக்குமாரத்தியாக இருக்க அழைக்கப்பட்டவள்.

அவளது வாழ்வு அரண்மனையில் இருக்கவேண்டும். என்ன பரிதாபமான முடிவு அம்மோன் அவளை இச்சித்தான் அவனால் அவளது கற்பு சூறையாடப்பட்டது அவள் அவகீர்த்திக்குள்ளானாள்.

அவன் அவளுடன் உறவு கொண்ட பின் அவளை வெறுத்தான். பாவம் தாமார் அவள் செய்யாத குற்றத்திற்க்காக பலியானாள்.

அவள் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் தனிமையான பெண்ணாக வாழ்ந்தாள்.

நம் வாழ்விலும் அம்மோன் போன்ற மனிதர்களிடம் கவனமாகா இடைபட தாமார் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம்.

இன்றும் நம் வாழ்வில் அம்மோன் போன்ற மனிதர்களிடம் மிகவும் கவனமய் இருப்பது நல்லது.

நீதிமொழிகள் 31:30
சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும்வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!