இலங்கையில் ஐ.நாவின் தலையீட்டை கோரவுள்ள போராட்டக்காரர்கள்
Prathees
2 years ago
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் முறையான அரசியல் அதிகார பரிமாற்றத்திற்கு தலையிடுமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுக்க சர்வகட்சி போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த பிரச்சனையான சூழ்நிலையில் அரசாங்கம் அடக்குமுறை வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதாகவும், இது மேலும் அதிகரிக்கலாம் என்பதால் சர்வதேச தலையீடு அவசியம் எனவும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
இதன்படி, இந்த கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையிடம் மிக விரைவில் கையளிக்க தயாராகி வருகிறது.