ரணில் வெற்றி பெற்றால் அடுத்த நாள் முதல் போராட்டம் தொடரும்

Kanimoli
2 years ago
ரணில் வெற்றி பெற்றால் அடுத்த நாள் முதல் போராட்டம் தொடரும்

அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டால் நாட்டில் மீண்டும் பாரிய போராட்டங்கள் வெடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க பதவியை விட்டு விலக வேண்டும் என்று மக்கள்  தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தற்போது கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில்  ரணில் விக்ரமசிங்க அந்த பதவியை பெற்றுக்கொள்ள முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என  தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

ரணில் பதவி விலக வேண்டும். 20ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் அவர் வெற்றிபெற்றால் 21 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

மக்களின் குரலுக்கு செவிசாய்த்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும். ரணிலை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்பதை உணர்ந்து செயற்படவேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!