ரஞ்சன் ராமநாயக்கவின் மன்னிப்பு தொடர்பாக ஆய்வு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக இலங்கையின் நீதியமைச்சு ஆராய்ந்து வருகின்றது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பணிப்புரைக்கமையவே இந்த ஆய்வு இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடூழிய சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ள நிலையில் பல சந்தர்ப்பங்களிலும் கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அவருக்கு மன்னிப்பு வழங்கவில்லை.
2021 ஜனவரியில் நீதிமன்றத்தை அவமதித்ததற்காக ராமநாயக்காவுக்கு உயர் நீதிமன்றம் முதன்முதலில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.
அவர் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்தபோதே, மற்றொரு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில், இந்த ஆண்டு ஜூன் மாதம் அவருக்கு மீண்டும் ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காலகட்டங்களில் ஜனாதிபதிகளின் மன்னிப்புக்கள்
நீதிமன்றத்தை அவமதித்ததற்காக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படுவது இது முதல் தடவையல்ல.
முன்னதாக பொதுபல சேனாவின் கலகொட அத்தே ஞானசார தேரரை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மன்னித்துள்ளார்.