இலங்கை தொடர்பாக இந்திய அரசு எடுத்த மற்றுமொரு அதிரடி முடிவு
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்திய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை இந்திய வெளிவிவகார அமைச்சு செவ்வாய்க்கிழமை வெளியிடும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவிக்கப்படும்.
இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதாக இந்தியா இலங்கைக்கு உறுதியளித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த பின்னர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவைச் சந்தித்த போது இந்த உறுதிமொழியை வழங்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அடுத்த 06 மாதங்களுக்கு, இலங்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சுமார் 05 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும், அதில் இந்தியா முக்கிய உதவிகளை வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.