நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை மீளக் கட்டுவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொள்கை தீர்மானம்!
Reha
2 years ago
மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் சொத்துக்களை இழந்த அனைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை மீளக் கட்டுவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொள்கை தீர்மானம் எடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
வீடுகளை அழித்தவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும், தனது ஆட்சியில் நாட்டில் வன்முறைகளுக்கு இடமில்லை எனவும் பதில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் அழிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.