ரணிலின் இல்லத்திற்கு தாக்குதலை மேற்கொண்ட நபர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட நபர் ஒருவர் நாட்டை விட்டு தப்பியோடி உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, ஏனையொரும் நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதற்கு மேற்குறித்த நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாகப் பயண தடையை பெற்றுக்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பாராளுமன்றம், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் ஆகியவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்டுஇ சேதங்களை ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் சுமார் 50 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள்இ சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு இவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.