சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு சாமர சம்பத் எதிர்ப்பு

Prathees
2 years ago
சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு சாமர சம்பத் எதிர்ப்பு

வெற்றிடமாகவுள்ள ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்வதற்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் தனது வாக்கைப் பயன்படுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிப்பதில்லை என அக்கட்சி தீர்மானித்துள்ள பின்னணியில் அது அமைந்துள்ளது.

எனினும், அந்தத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது.

 அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக உள்ள 10 கட்சிகளில் எஞ்சியுள்ள 9 கட்சிகள் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பதை தனித்தனியாக தீர்மானிக்கும் என அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை 10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிது குமாரதுங்க, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது எதிர்கால வேலைத்திட்டத்தை நாட்டின் முன் அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.