இலங்கையை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள் - G20 மாநாட்டில் கூறிய IMF தலைவர்
உலகப் பொருளாதார வளர்ச்சி 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.
அந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகளுக்கு வலுவான கொள்கைத் தலையீடுகள் தேவை என்று நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டர்லினா ஜார்ஜீவா கூறுகிறார்.
இந்தோனேசியாவில் நடைபெற்ற G20 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ளது, இது பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய நிதி நிலைமையும் முன்பு எதிர்பார்த்ததை விட கடினமாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய இலங்கையானது அதிக கடன் அளவுகள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட கொள்கைகளைக் கொண்ட நாடுகளுக்கு எச்சரிக்கை அறிகுறியாக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், கடன் சுமை, கடனைத் திருப்பிச் செலுத்துதல், பணவீக்கம் மற்றும் பொருளாதார சரிவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக இலங்கை மற்றும் பல நாடுகள் தற்போது நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளன.