ரணில் பிரதமர் ஆனதற்கு முக்கிய காரணம்
#Ranil wickremesinghe
#SriLanka
#Sri Lanka President
Kobi
2 years ago
கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக கடந்த மே9ஆம் திகதி நடந்த ஒரு சதி திட்டம் தான் ரணில் பிரதமர் ஆனதற்கு காரணமாக அமைந்தது என முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் பிரேமகுமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியிள் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,ராஜபக்சர்கள் சென்ற அதே ஆட்சி வழியில் ரணில் விக்ரமசிங்க செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருக்கின்றார். எனவே இதனையும் தோல்வியடைய செய்ய வேண்டும். மக்கள் அதிகாரத்துடன் இதனையும் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதில் முன்னிலை சோஷலிச கட்சியின் பங்கும் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.